TVK Vijay: 20 வருஷத்துக்கு பிறகு முத்துப்பாண்டி, வேலுவை பகைதீர்த்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது பிரகாஷ்ராஜ் விஜய் பற்றி சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று.
பிரகாஷ் ராஜ் கடந்த சில வருடங்களாகவே கர்நாடகா அரசியலில் தனக்கான முத்திரையை பதித்து வருகிறார். மேலும் மோடி அரசுக்கு எதிராக பல கருத்துக்களை தைரியமாக பேசியும் வருகிறார்.
வைரலாகும் முத்துபாண்டியின் பேட்டி!
இவர் கன்னட மீடியாவுக்கு கொடுத்த பேட்டி ஒன்றின் விஜய் பற்றி பேசியிருப்பதை தற்போது ட்விட்டரில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
அதில் விஜய் மற்றும் பவன் கல்யாண் இருவருமே நடிகர்கள் என்பதால் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். இதைத் தாண்டி இவர்களிடம் தெளிவான அரசியல் பார்வை இல்லை. மேலும் ஒரு பிரச்சனையை எப்படி தீர்க்க வேண்டும் என்ற தீர்மானமும் இவர்களிடம் தெளிவாய் இருப்பதாய் தெரியவில்லை.
தனக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து அரசியல் களம் காண்கிறார்கள் என்று பேசி இருக்கிறார்.
விஜய் பற்றி அவருக்கு நெருக்கமான நடிகர் ஒருவர் இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.