Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா மனோஜ் கையில் தாயத்தைக் கட்டி ரோகினியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று தாயத்தை வாங்கிட்டு வந்தார். இது தெரியாத முத்து அந்த தாயத்தை அண்ணாமலை கையில் கட்டி விடுகிறார். இதை பார்த்த விஜயா அந்த தாயத்தை கழட்ட சொல்கிறார்.
அதாவது மனோஜ்க்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பூஜை பண்ணி வாங்கிட்டு வந்த தாயத்து மனோஜ் கையில் தான் கட்ட வேண்டும் என்று விஜயா பொய் சொல்லி விடுகிறார். உடனே முத்து, அண்ணாமலை கையில் கட்டிய தாயத்தை கழட்டி விஜயாவிடம் கொடுத்து விடுகிறார். அதை விஜயா எடுத்து மனோஜ் கையில் கட்டி விடுகிறார்.
அப்பொழுது அங்கே வந்த ரோகினி அந்த தாயத்தை பார்த்துவிட்டு இன்னொரு கையில் ரோகிணி வாங்கிட்டு வந்த தாயத்தை கட்டி விடுகிறார். போட்டி போட்டு இரண்டு பேரும் மாத்தி மாத்தி தாயத்தை வாங்கிட்டு மனோஜ் கையில் கட்டி விடுகிறார்கள். அடுத்ததாக ரோகிணி அயன் பண்ணி விட்டு அயன்பாக்ஸை ஆஃப் பண்ணாமல் விட்டதால் மனோஜ் கையில் லேசாக சூடு பட்டு விட்டது.
உடனே மனோஜ் கத்தி ரோகினி இடம் சண்டை போடுகிறார். இதை பார்த்த விஜயா தாயத்து நல்ல வேலை செய்கிறது என்று ரூமுக்குள் போய் விஜயாவும் ரோகிணியை திட்டி அவமானப்படுத்துகிறார். அதற்கு மனோஜ், நீ ஏன் இங்கே வந்தாய், நீ ஒன்னும் ரோகினையை திட்ட வேண்டாம். அவள் செய்ததற்கு நான் திட்டி விட்டேன் நீ ரூமை விட்டு வெளியே போ என்று சொல்கிறார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியான விஜயா என்னையா வெளியே போக சொல்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு மனோஜ் வீட்டை விட்டு ஒண்ணும் உங்களை வெளியே போக சொல்லவில்லை. ரூமை விட்டு தானே போக சொன்னேன் வெளியே போங்க என்று சொல்லிய நிலையில் ரோகிணி சந்தோஷப்பட்டு விஜயா அழுது கொண்டு வெளியே வந்து விடுகிறார்.
பிறகு ஹாலில் இருந்து விஜயா அழுவதை பார்த்து குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள். அதற்கு மனோஜ் எண்ணை ரூமை விட்டு வெளியே போ என்று சொல்லிவிட்டார் என ஃபீல் பண்ணுகிறார். ஆனால் இதையெல்லாம் பார்த்த ரோகினிக்கு ரொம்பவே சந்தோஷமாகிவிட்டது. அடுத்ததாக பார்வதி வீட்டிற்கு விஜயா போகிறார்.
அங்கே சிந்தாமணி வந்து உங்க பையன் செய்த திருட்டு வேலை தெரியுமா என்று கேட்கிறார். அதற்கு விஜயா ஆக்ரோஷமாகி பொண்டாட்டி பணத்தை திருடி விட்டால் புருஷன் காரன் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டான். அதனால் தான் பணத்தை உங்க வீட்டில் வந்து என் பையன் எடுத்தான் என்று கத்த ஆரம்பித்து விட்டார்.
அது மட்டும் இல்லை பணத்தை மட்டும் திருடாமல் எதற்கு மீனா கையை உடைத்தீங்க என்று மீனா முத்துவிற்காக சப்போர்ட் பண்ணி சிந்தாமணி இடம் சண்டை போட்டு இனி இங்கே நீங்கள் வர வேண்டாம் என கோபமாக சிந்தாமணி இடம் சொல்லி விடுகிறார். ரோகிணி வச்சா ஆப்பு விஜயாவை கொஞ்சம் கொஞ்சமாக மாத்தி முத்து மற்றும் மீனா மீது பாசத்தை காட்டும் அளவிற்கு மாறி வருகிறது.