Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கல்யாண வாழ்க்கையில் தோற்றுப் போன பாக்கியா துவண்டு போய் இருக்காமல் சொந்தக்காலில் நின்னு தன்னையும் தன் குடும்பத்தையும் உயர்த்துவதற்கு பாடுபட்டார். அப்படி பாக்கியம் எடுத்து வச்ச முயற்சியில் வெற்றி கிடைத்ததன் பலனாக பாக்யாவிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிட்டது.
ஆனால் இதையெல்லாம் குழிதோண்டி புதைக்கும் விதமாக சுதாகர் நுழைந்த நிலையில் பாக்யாவின் ஹோட்டலை அபகரித்து விட்டார். இதனால் அடுத்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் பாக்யாவிற்கு அறிவுரை பண்ணும் விதமாக ஈஸ்வரி பேசுகிறார். அதாவது இதுவரை நீ ஓடியது போதும் இனிமேல் ஓய்வெடுக்கும் நேரம் வந்துவிட்டது.
வீட்டில் இருந்து கொண்டு சமையல் வேலைகளை பார்த்து பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டு இரு. மற்றதெல்லாம் உன் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என சொல்கிறார். உடனே செழியன் ஆமாம் அம்மா நீங்க வீட்டில் இருங்க நான் மூத்த பிள்ளையாக இருந்து பொறுப்பாக நடந்து கொண்டு குடும்பத்தை கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
இதை கேட்டதும் எழிலும் நானும் எதற்கு இருக்கிறேன், நானும் என்னால் முடிந்த எல்லாத்தையும் செய்கிறேன் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி இரண்டு பிள்ளைகளும் இவ்வளவு சொல்றதே பெரிய விஷயம். அதனால் நீ வீட்டில் சமையல் வேலை மட்டும் பார்த்துக் கொண்டு இரு என பாக்கியாவிற்கு கால் கட்டு போடும் அளவிற்கு ஈஸ்வரி மறைமுகமாக பாக்யாவின் லட்சியத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்.
இதற்கு பாக்கியமும் எதுவும் சொல்லாமல் சரி அத்தை என்று சொல்லிவிடுகிறார். ஆனால் எப்பொழுதுமே யாரை நம்பியும் நாம் இருக்கக் கூடாது நம்மளால் முடிந்தவரை ஏதாவது ஓடிக்கொண்டே இருக்கணும் என்று முடிவு பண்ணி விட்டார்.
அந்த வகையில் வாடகைக்கு கடை இருப்பதை செய்தித்தாளில் பார்த்து நோட் பண்ணி விட்டு செல்விக்கு போன் பண்ணுகிறார். செல்வியை கூப்பிட்டு கடைக்கு போகலாம் என பாக்கிய கிளம்பிய நிலையில் ஈஸ்வரி எங்கே போகிறாய் எதற்கு போகிறாய் என்ற கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அதற்கு பாக்கியம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லிய நிலையில் ஈஸ்வரி அதெல்லாம் ஒன்னும் போக வேண்டாம் வீட்டு வேலையே பாரு என சொல்கிறார்.
ஆனால் கோபி, பாக்கியாவை நீ போய் உன் வேலையை பாரு என்று சொல்லி ஈஸ்வரியை சமாதானப்படுத்துகிறார். பிறகு செல்வியை கூட்டிட்டு இரண்டு மூணு கடையெல்லாம் போய் விசாரிக்கிறார். அந்த வகையில் பாக்யாவின் முயற்சி வெற்றியடையும் வகையில் கூடிய சீக்கிரத்தில் கடை ஆரம்பித்து சுதாகர் மூஞ்சியில் கரியை பூசி விடுவார்.