கடந்த இரண்டு வாரங்களாக எதிர்நீச்சல் 2 இல் தடபுடலாக மணிவிழா ஏற்பாடு நடந்து வருகிறது. ஒரு பக்கம் இது நடக்குமா நடக்காதா என்ற டிவிஸ்டை ஜீவானந்தம் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார். மறுபக்கம் இது நடந்தே ஆக வேண்டும் என்றும் குணசேகரனும் ஆதிக்கம் காட்டுகிறார்.
குணசேகரனின் முழு கோபமும் ஜனனி மீது தான் இருக்கிறது. அவர்தான் மொத்த குடும்பத்தையும், வீட்டுப் பெண்களையும் வேறு பாதையில் நடத்துகிறார், உரிமைகளைப் பற்றி ஓவராக குரல் கொடுக்கிறார் என்றெல்லாம் யோசித்து அவர் மீது வன்மத்தை காட்டுகிறார்.
குணசேகரன் இப்பொழுது தாயார் விசாலாட்சி அம்மையாரை வைத்து காய் நகர்த்தி வருகிறார், வீட்டு மருமகள்களை யோசிக்க விடக்கூடாது, அவர்கள் அடுப்பங்கரையை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்பதுதான் அவருடைய சைக்கோதனமான ஆசை. இதனால் தனது அம்மா விசாலாட்சி மூலம் அவர்களுக்கு உச்சகட்ட அழுத்தத்தை கொடுக்கிறார்.
இருவரும் சேர்ந்து மணிவிழாவிற்கு வரும் அனைவருக்கும் நீங்கள் தான் சமைக்க வேண்டும் என ஆடர் போடுகின்றனர். விசாலாட்சி அம்மையார் வெளியில் கேட்டரிங் ஆர்டர் எல்லாம் எடுக்கிறீர்கள், 200 பேருக்கு சமைப்பது பெரிய விஷயமா என அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்.
குணசேகரனின் தம்பிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதனால் வீட்டுப் பெண்கள் கணவன்மார்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். காலையில் 3 மணிக்கு எல்லாம் எழுந்திருத்து கணவர்களை தொந்தரவு செய்கிறார்கள். அவர்களுக்கு தங்களது கஷ்டத்தை எடுத்துரைக்கிறார்கள். தம்பிகளும் அண்ணனின் ட்ராமாவை நம்பி மனைவிகளை கஷ்டப்படுத்துகிறார்கள்.