Vijay Tv: சீரியலை விட விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவை தான் மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். அதற்கு காரணம் பல வெற்றி நிகழ்ச்சிகளை விஜய் டிவி கொடுத்து மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணியிருக்கிறார்கள். அந்த வகையில் குக் வித்து கோமாளி நிகழ்ச்சியும் மக்களிடம் பிரபலமாகி மன அழுத்தத்தை குறைக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.
அதனால் தான் கிட்டத்தட்ட ஐந்து சீசன்கள் வெற்றி பெற்று தற்போது ஆறாவது சீசன் ஆக நேற்று தொடங்கியிருக்கிறது. ஆனால் கடந்த சீசனில் ஏற்பட்ட சர்ச்சையினால் தொகுப்பாளனி மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் மோதல் ஏற்பட்டு விட்டது. இதனால் மணிமேகலை விஜய் டிவியை விட்டு விலகி ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளனியாக சேர்ந்து பிரம்மாண்டமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த சூழ்நிலையில் நேற்று ஆரம்பித்த குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியை வழக்கம்போல் ரக்சன் மட்டுமே தொகுத்து வந்தார். அப்பொழுது போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் ரக்சன் கூறியது மிகப்பெரிய பேசும் பொருளாக அமைந்திருக்கிறது.
அதாவது கடந்த ஐந்து சீசன்கள் கூடவே இருந்த போட்டியாளர் யார் போயிருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் இந்த சீசனில் யார் எலிமினேட் ஆகி நிகழ்ச்சியை விட்டுப் போனாலும் நான் ரொம்பவே வருத்தப்படுவேன் என்று சொல்லி மணிமேகலையை தாக்கி பேசியதாக நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
எதற்கு இந்த விஜய் டிவிக்கும் தொகுப்பாளருக்கும் இந்த வேலை என்பது தெரியவில்லை என நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள். மணிமேகலை தற்போது ஜீ தமிழுக்கு தாவிய நிலையில், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் பட்சத்தில் அவரை சீண்டும் விதமாக இந்த மாதிரி சொல்வது சரி இல்லை என மணிமேகலுக்கு சப்போர்ட்டாக பலரும் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
அத்துடன் ரக்சன் உடன் சேர்ந்து எந்த வித பெண் போட்டியாளர்களும் தேவையில்லை, ரக்சன் மட்டுமே தொகுத்து வழங்கினால் போதும் என்று விஜய் டிவி முடிவெடுத்துவிட்டது. அதற்கு பதிலாக நடுவராக ஒருவரை அதிகரித்து செஃப் கௌசிக்கை உள்ளே கொண்டுட்டு வந்திருக்கிறார்கள்.