Vijay Tv Priyanka: சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் விஜய் டிவி மிகப்பெரிய பங்கை கொடுத்து வருகிறது. மக்களிடம் பிரபலமாவதற்கு முக்கிய காரணம் சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை வித்தியாசமாக கொடுத்து வருவதால் தான். அந்த வகையில் காலம் காலமாக மாறாத நிகழ்ச்சிகளாக ஜோடி நம்பர் ஒன், கலக்கப்போவது யாரு, நீயா நானா, பிக் பாஸ் மற்றும் குக் வித்து கோமாளி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் இவ்வளவு வெற்றிகரமாக மக்களிடம் பிரபலமாக ஆனதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்கள் ஒரு வகையில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்கள், அவர்களுக்கான தனித்துவத்தை காட்டும் விதமாக சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார்கள். அதனால் தான் பல வருடங்களாக நீயா நானா நிகழ்ச்சியை கோபி மட்டும் நடத்தி வெற்றியை கொடுத்து வருகிறார்.
இவரை தொடர்ந்து பிரியங்கா மற்றும் மாகாபா எந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் அது வெற்றி தான் என்று சொல்லும் அளவிற்கு ஹிட் கொடுத்து விடுகிறார்கள். இப்படி இந்த மூன்று தொகுப்பாளர்கள் இருக்கும் வரை விஜய் டிவியில் சரிவே இல்லை என்பதற்கு ஏற்ப பில்லர் ஆக இருந்து பாடுபடுகிறார்கள்.
அதே மாதிரி விஜய் டிவியும் தொகுப்பாளர்களுக்கு ஏற்ற மாதிரி பல சலுகைகளை செய்து வருகிறது. ஒரு பக்கம் சம்பளமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்து வருகிறது. அந்த வகையில் பிரியங்காவுக்கு முதலிடம் என்பதற்கு ஏற்ப முக்கால்வாசி எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் பொறுப்பை விஜய்டிவி பிரியங்காவிடம் கொடுத்து இருக்கிறது.
போதாதற்கு போட்டியாளர்களாக பங்குபெறும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாப் 2 இடத்தைப் பிடித்தார், அதே மாதிரி குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கு பெற்று டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.
இப்படிப்பட்ட இவர் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் டிஜே வசி என்பவரை காதலித்து சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டார். அந்த வகையில் விஜய் டிவியில் இருந்து பிரியங்கா விலகிவிட்டார் என்று தகவல் வந்த நிலையில் அது எல்லாம் பொய், பிரியங்கா இல்லை என்றால் விஜய் டிவி இல்லை என்பதற்கு ஏற்ப திரும்ப வந்து விட்டார்.
இப்படி எந்நேரமும் விஜய் டிவிக்காக பாடுபடும் பிரியங்காவின் சம்பளம் என்னவென்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ஒரு எபிசோடுக்கு பிரியங்காவின் சம்பளம் 2.5 லட்சம் ரூபாய். அதனால்தான் வேறு எங்கேயும் போகாமல் விஜய் டிவியை கதி என்று இருக்கிறார்.