சூர்யாவின் அடுத்தடுத்த லைன்அப் நீண்டு கொண்டே போகிறது. ஆர்.ஜே பாலாஜி படத்தை முடித்துவிட்டு, தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி படம், வாடிவாசல், கைதி 2, ரோலக்ஸ் என அடுத்தடுத்த படங்கள் நடிக்கவிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க கிட்டத்தட்ட 2019 ஆம் ஆண்டு சூர்யா கமிட்டான படம் வாடிவாசல்.
வெற்றிமாறன் இயக்கவிருக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கவிருந்தார். ஐந்து வருடத்திற்கு முன்னாடி சூர்யா வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் 30 கோடிகள். ஆனால் இப்பொழுது தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி படத்துக்கு 60 கோடிகள் சம்பளம் வாங்க போகிறார் சூர்யா
ஏற்கனவே வெங்கி அட்லூரி இயக்கிய லக்கி பாஸ்கர் படத்தை வாங்கிய Netflixக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதனால் இவர்கள் கண்ணை மூடிக்கொண்டு அட்லூரி காம்பினேஷனில் சூர்யா நடிக்கும் படத்தை 85 கோடிகள் கொடுத்து வாங்கி விட்டனர். இதன் அடிப்படையில் சூர்யாவிற்கு 60 கோடிகள் சம்பளமாக கொடுத்துவிட்டது இந்த படத்தை தயாரிக்கும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்.
இப்படி ஒய்யாரமாக பறக்கும் சூர்யா கேரியரில் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படம் மட்டும் இன்னும் விலை போகாமல் கிடைக்கிறது. சூர்யாவின் ரெட்ரோ படத்தை Netflix ஓடிடி தளம் 65 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த படத்திற்கு சூர்யா வாங்கிய சம்பளம் 30 கோடிகள். இப்பொழுது அடுத்த படத்திற்கு அதை அப்படியே இரட்டிப்பாக்கி விட்டார்.
கங்குவா தோல்வியால் துவண்டு போயிருந்த சூர்யா இப்பொழுது இறங்கி அடிக்க ஆரம்பித்து விட்டார். ஒரு பக்கம் விஜய் சினிமாவை விட்டு விலகியது, மறுபக்கம் அஜித் கார் ரேஸில் கவனத்தை திருப்பியது என எல்லாம் சூர்யாவிற்கு தான் சாதகமாய் அமைந்து வருகிறத. கூடிய விரைவில் நூறு கோடி சம்பளம் வாங்கி விடுவார் என்பது தான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்.