Gossip: மூன்று எழுத்து நடிகருக்கு நேரமே சரியில்லை. எந்த படம் நடித்தாலும் அது சொதப்பலில் தான் முடிகிறது. இத்தனைக்கும் நடிகர் கடுமையான உழைப்பாளி.
ரிஸ்க் எடுத்து நடிக்க கூடியவர் அப்படி நடித்தும் கூட படம் சரியாக போகாததற்கு சோசியல் மீடியாவும் ஒரு காரணம். அதே போல் அவருடைய மனைவியும் ஒரு காரணம் என்கின்றனர்.
தேவையில்லாமல் கருத்து சொல்லி வம்பை விலை கொடுத்து வாங்கினார் மனைவி. இது போதாது என்று கதை விஷயத்திலும் தலையிடுகிறாராம்.
கட்டிய மனைவியால் வந்த பிரச்சனை
பெரிய பெரிய இயக்குனர்களை தான் நடிகர் தேர்ந்தெடுக்கிறார். அவர்களிடம் கதை கேட்பது அவருடைய மனைவி தானாம். ஓவர் பில்டப் வேண்டும் என அவரே சொல்கிறாராம்.
அதேபோல் பெரிய பட்ஜெட் என எல்லாத்தையும் தீர்மானிக்கிறார். அதுதான் பிரச்சனைக்கு மூல காரணமாக இருக்கிறது. நல்ல திறமையான நடிகர் எதார்த்தமாக நடித்தாலே ஆடியன்ஸ்க்கு பிடித்து விடும்.
ஆனால் அதை புரிந்து கொள்ளாத மனைவி பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்று நிற்கிறாராம். இதனால் பழைய மாதிரி நாமே கதை கேட்கலாமா என நடிகர் யோசிக்கிறாராம்.