சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 7 திரில்லர் படங்கள்.. சீட்டின் நுனிக்கு வர செய்த பயங்கரம்

Best Thriller Tamil Movies : சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நம்மளை பயத்தில் ஆழ்த்திய 7 படங்களை இந்த பதிவில் பார்க்கலாம். முதலாவதாக விமல், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் குரங்கு பொம்மை.

இதில் ஹீரோவின் அப்பா தனது நண்பனுக்காக ஒரு வேலை செய்ய செல்லும்போது காணாமல் போகிறார். அவருக்கு என்ன நடந்தது என்பதுதான் குரங்கு பொம்மை கதை.

கலையரசன் நடிப்பில் வெளியான அதே கண்கள் படத்தில் பார்வையற்ற கதாநாயகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். ஆனால் கதாநாயகனுக்கு பார்வை கிடைக்கும் போது காதலித்த பெண் காணாமல் போகிறார். அந்தப் பெண் யார் என்பதுதான் அதே கண்கள் படத்தின் கதை.

பயத்தில் ஆழ்த்திய திரில்லர் படங்கள்

மிரள விட்ட படம் தான் 8 தோட்டாக்கள். போலீஸ் அதிகாரியின் துப்பாக்கி காணாமல் போக அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. இதில் எம் எஸ் பாஸ்கர் அருமையாக நடித்திருப்பார்.

கடைசீல பிரியாணி படத்தில் தனது அப்பாவைக் கொன்றவர்களை மூன்று மகன்கள் எவ்வாறு பழிவாங்குகிறார்கள் என்ற சம்பவத்தை சுற்றிய கதை. அடுத்ததாக அசோக் செல்வன் நடிப்பில் வெளியான வேழம் படமும் பயங்கரமாக எடுக்கப்பட்டிருந்தது.

ஹீரோயின் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகளை துரத்தி செல்லும் கதாநாயகன் சந்திக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக துருவங்கள் பதினாறு படம் ஒரு தரமான படைப்பாக எடுக்கப்பட்டது.

போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரே சமயத்தில் பல வழக்குகளில் ஒரே புள்ளியில் இணைத்தால் என்னாகும் என்பதை துருவங்கள் பதினாறு படம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவன் செயின் பறிப்பு கும்பலில் சேர்ந்த நிலையில் அதைப்பற்றி நடக்கும் சம்பவங்கள் தான் மெட்ரோ படம்.