ஈஸ்வரியுடன் சேர்ந்து பாக்யாவிற்கு எதிராக நிற்கும் குடும்பம்.. கை தூக்கி விடும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், சொந்தக்காலில் நின்னு முன்னேற வேண்டும் என்று நினைக்கும் எல்லோருக்கும் தொடர்ந்து கஷ்டங்கள் வருவது வழக்கம்தான். அதிலும் ஒரு பெண்ணாக இருந்து முன்னேறுவது மிகப்பெரிய கடினமான ஒரு விஷயம். அப்படிப்பட்ட கஷ்டத்தை தான் பாக்கியா அனுபவித்துக் கொண்டிருக்கிறார.

அந்த வகையில் கஷ்டப்பட்டு உருவாக்கிய இரண்டு ஹோட்டலையும் சுதாகர் அபகரித்து விட்டார். இருந்தாலும் துவண்டு போகக்கூடாது என்பதற்காக செல்வி கூட்டணி உடன் புதுசாக வேறு ஒரு ஹோட்டலை பார்த்துக் கொண்டு வருகிறார். அப்படி பார்த்த கடைகள் எல்லாம் சில காரணங்களால் பாக்யாவிற்கு கிடைக்காமல் போய்விடுகிறது. கடைசியில் ஒரு கடை கிடைத்திருக்கிறது. ஆனாலும் அந்தக் கடை எதிர்பார்த்த அளவுக்கு பெருசாவும் இல்லை, சுத்தமாகவும் இல்லை.

இதனால் செல்வி, பாக்கியாவிடம் இந்த கடை வேண்டாம் வேறொரு கடையை பார்க்கலாம் என்று சொல்கிறார். ஆனால் பாக்யாவின் பட்ஜெட்டுக்கு வேற கடை கிடைக்கவில்லை என்பதால் இந்த கடையை முடித்து விடலாம் என்று அட்வான்ஸ் தொகையை கொடுத்து விடுகிறார். இந்த விஷயத்தை வீட்டில் வந்து சொல்லிய பொழுது ஈஸ்வரி உனக்கு எதற்கு தேவையில்லாத வேலை. ஒழுங்கா வீட்டு வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இரு என்று முட்டுக்கட்டை போடுகிறார்.

ஈஸ்வரி தான் இப்படி சொல்கிறார் என்றால் பெற்ற பிள்ளைகளும் பாக்யாவின் ஆசைக்கு குறுக்கே நிற்கிறார்கள். முக்கியமாக எழில் மற்றும் செழியனும் வேண்டாம் என்று பாக்கியாவிடம் சொல்கிறார்கள். பாக்கியா யார் பேச்சையும் கேட்காமல் நான் நிச்சயம் என்னுடைய பிசினஸில் ஜெயித்து காட்டுவேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

இப்படி இவர்கள் வேண்டாம் என்று சொன்னாலும் கோபி நிச்சயம் பாக்கியாவிற்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கூடவே நிற்பார். அதே நேரத்தில் பாக்யாவின் வெற்றியை சுதாகர் கண் கொண்டு பார்த்து வயிற்றெரிச்சல் பட போகிறார். இதுதான் சுதாகருக்கு பாக்யா கொடுக்கும் பதிலடியாக இருக்கப் போகிறது.