ஜனநாயகனில் விஜய்யின் பெயர்.. தளபதியின் மாஸ்டர் பிளான்

Vijay : எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ஜனநாயகன் படத்தின் கதை விஜய்யின் அரசியல் பயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடத்தப்பட்டது. இந்த சூழலில் ஜனநாயகன் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பெயர் உலாவி வருகிறது. அதாவது தளபதி வெற்றி கொண்டான் என்பது விஜய்யின் கதாபாத்திரம் பெயர் என்ன ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி இருந்தார். இதை (TVK) என்று தான் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். அதேபோல் இப்போது ஜனநாயகன் படத்திலும் விஜய்யின் பெயரை சுருக்கமாக TVK என்றுதான் அழைக்க உள்ளனர்.

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர்

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் ஒரு தரமான அரசியல் படமாக ஜனநாயகன் படத்தை இறக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆகையால் ஜனநாயகன் படத்தில் எதிர்பார்க்காத பல அரசியல் சம்பவங்கள் இடம்பெற இருக்கிறது.

மேலும் ஜனநாயகன் படத்தின் பெயர் முதலில் நாளைய தீர்ப்பு என்று வைக்கப்பட இருந்தது. ஏனென்றால் விஜய்யின் திரை பயணத்தின் ஆரம்ப படம் நாளைய தீர்ப்பு தான். ஆகையால் விஜய்யின் சினிமா முடிவையும் குறிக்கும் வகையில் நாளைய தீர்ப்பு என்று திட்டமிட்டு இருந்தனர்.

அதன் பின்பு ஜனநாயகத்தை மையப்படுத்தி இந்த படத்தின் கதைகளும் இருந்ததால் அதன் பிறகு ஜனநாயகன் என்று டைட்டிலை வைத்துள்ளனர். மேலும் படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வர உள்ளது.