Rajini-Retro: சூர்யா நடிப்பில் கடந்த வாரம் ரெட்ரோ படம் வெளியானது. சிலருக்கு படம் பிடித்திருக்கிறது. சிலருக்கு பிடிக்கவில்லை என்ற கலவையான விமர்சனங்கள் தான் இப்போது வரை இருக்கிறது.

இருந்தாலும் வார இறுதியில் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருந்தது. இந்நிலையில் ரெட்ரோ படத்தை சூப்பர் ஸ்டார் பார்த்துவிட்டு மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.

இதை தன் சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ள கார்த்திக் சுப்புராஜ் நான் இப்போது வானத்தில் பறக்கிறேன். ரொம்ப சந்தோசமா இருக்கு தலைவரின் வார்த்தை என குறிப்பிட்டுள்ளார்.
ரெட்ரோ பார்த்து ரஜினி சொன்ன வார்த்தை
அது மட்டும் இன்றி ரஜினி சூர்யாவின் நடிப்பை ஆகா ஓகோ என பாராட்டி தள்ளி இருக்கிறார். மொத்த டீமுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
கடைசி 40 நிமிஷம் சிறப்பாக இருக்கிறது. எல்லோரும் போட்ட உழைப்புக்கு வாழ்த்துக்கள் என தலைவர் பாராட்டி இருக்கிறார்.
இதை தெரிவித்துள்ள கார்த்திக் சுப்பராஜ் ஜானி பாரியை புகழ்ந்துள்ளார் என ஒரு போஸ்டரையும் இணைத்துள்ளார். அதில் ஜானி படத்தில் தலைவரின் லுக் இடம் பெற்றுள்ளது.
இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் தலைவரை வைத்து ஒரு படம் பண்ணுங்க என கார்த்திக் சுப்புராஜுக்கு ஜாலி கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.