மொத்த சாபத்தையும் வாங்கிக் கொண்ட யோகி பாபு.. ஏழரையை இழுத்துவிட்ட ஏழு லட்சம்

2009ஆம் ஆண்டு சிரித்தால் ரசிப்பேன் மற்றும் யோகி போன்ற படங்களில் கண்டுபிடிக்க முடியாத வேடத்தில் நடித்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் யோகி பாபு. இன்று 15 வருட கடின உழைப்பால் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார். இன்று இவர் நடிப்பில் வருடத்திற்கு பத்து படங்களுக்கு மேல் வெளிவருகிறது.

தற்போது வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு பிறகு இவர் கையில் மூன்றே மூன்று படங்கள் மட்டும் தான் இருக்கிறது. அதிலும் ராஜா ஷாப் என்ற ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் கஜானா மற்றும் மெடிக்கல் மிராக்கிள் போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கிறார்.

கஜானா படத்தில் இண்டிகோ பிரபாகர், மொட்ட ராஜேந்திரன், பிரதாப் போத்தன் போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜா, யோகி பாபுவை பற்றி வாய்க்கு வந்தபடி சரமாரியாக அவதூறு பேசினார்.

யோகி பாபு, படத்தில் நடித்தால் மட்டும் போதாது படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 7 லட்சம் கேட்டார். அதை கொடுக்கவில்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவர் நடித்த படத்தையே இப்படி தவிக்க விடுகிறார் என யோகி பாபுவை அசிங்கப்படுத்தினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த யோகி பாபு தரப்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறார், ஷூட்டிங்கில் மிகவும் பிசியாக இருப்பதால் குறிப்பிட்ட அந்த நாளில் அவரால் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என படத்தின் தயாரிப்பாளர் ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.