மேடையில் கண்ணீர் விடும் சமந்தா.. இதுதான் காரணம்

Samantha : சமந்தா கடந்த 2022 ஆம் ஆண்டு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்தே அவரது உடல்நிலை பற்றிய கவலை ரசிகர்களுக்கு அதிகமாகிவிட்டது. அதேபோல் சகுந்தலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சமந்தா கண்ணீர் விட்டிருந்தார்.

இதை அடுத்து சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சமந்தா கண்ணீர் விட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருந்தது.

இப்போது இது குறித்து சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது மேடைகளில் நான் கண்கலங்கி கண்ணீரைத் துடைப்பதற்கு காரணம் அதிக வெளிச்சத்தை கண்டால் என் கண்கள் சென்சிடிவ் ஆகி கண்ணீர் வந்துவிடும்.

மேடையில் கண்ணீர் விடும் சமந்தா

மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டு அழுகையோ, சோகமாகவோ நான் இல்லை. மகிழ்ச்சியாகவும் நலமாகவும் இருப்பதாக ரசிகர்களுக்கு வீடியோ மூலம் சமந்தா கூறி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது‌.

மேலும் சமந்தா இப்போது சுபம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இது தவிர சில படங்களில் நடித்தும் வருகிறார். சமந்தா மிகவும் மன வலிமை கொண்டவர். ஒரு தரமான கம்பேக் கொடுப்பார்.

மேலும் தமிழ் சினிமாவிலும் சமந்தா நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆகையால் மிக விரைவில் மீண்டும் பழைய உத்வேகத்துடன் சமந்தா வலம் வர இருக்கிறார்.