அங்க போர் நடந்துகிட்டு இருக்கு.. இப்ப எதுக்குடா ஐபிஎல், எல்லாத்தையும் நிறுத்துங்க, வைரல் மீம்ஸ்

Memes: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி விட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்து வருகிறது இந்தியா.

இதனால் ஒட்டு மொத்த மக்களும் ஒரு பதட்ட நிலையில் இருக்கின்றனர். அதே சமயம் அரசியல் பிரபலங்கள் முதல் திரை பிரபலங்கள் வரை எல்லோரும் இதற்கு ராயல் சல்யூட் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் சாமானிய மக்கள் பதிலுக்கு அவங்க எங்கேயாவது குண்டு போட்டா நாங்க தான் மாட்டணும். பெரிய ஆளுங்க எல்லாம் தப்பிச்சு வெளிநாடு போயிடுவீங்க என ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் உலக நாடுகள் கூட இந்தியா பாகிஸ்தான் நிதானத்தை கடைப்பிடித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது.

இப்படி சோசியல் மீடியா முழுவதும் இந்த போர் செய்திகள் தான் பரவி வருகிறது. அதே சமயம் நெட்டிசன்கள் இதை மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அங்க போர் நடந்துகிட்டு இருக்கு எல்லாரும் பதட்டமா இருக்காங்க. உங்களுக்கு என்னடா ஐபிஎல் மேட்ச் கேக்குது. எல்லாத்தையும் நிறுத்துங்க.

இப்படி போருக்கு ஆதரவு கொடுக்குறியே பதிலுக்கு குண்டு போட்டா என்ன பண்ணுவ. நான் தான் உள்ளூரில் இல்லையே வெளிநாட்டுல இருக்கேன்.

போர் தொடங்கிட்டதனால சமோசா விக் விலைய ஏத்தியாச்சு, கட்டுபடி ஆகலப்பா என பல மீம்ஸ் இணையத்தை சுற்றி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.