அட்டகாசமான வசூல் வேட்டையில் டூரிஸ்ட் ஃபேமிலி.. ஒரு வாரமாகியும் குறையாத கலெக்ஷன்

Tourist Family Collection : அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார, சிம்ரன் நடிப்பில் கடந்த மே ஒன்றாம் தேதி ரெட்ரோ படத்துடன் வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி. குடும்பம் கதை சார்ந்த என்டர்டைன்மென்ட் படமாக எடுக்கப்பட்டிருந்தது.

இப்படத்தை எம்ஆர்பி என்டர்டைன்மென்ட் உடன் இணைந்து மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. படத்தின் கதை என்னவென்றால் இலங்கையைச் சார்ந்த ஒரு தமிழ் குடும்பம் உள்ளது.

அவர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சேரும்போது சந்திக்கும் பிரச்சனைகளை எதார்த்தமான காமெடியால் டூரிஸ்ட் ஃபேமிலியில் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் முதல் நாளிலிருந்து நல்ல வசூலை பெற்று வருகிறது.

ஒரே வாரத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி செய்த வசூல்

அந்த வகையில் ஏழு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டர் முழுவதுமே ஹவுஸ்ஃபுல் ஆக உள்ளதாம். ஏழு நாட்கள் முடிவில் தமிழ்நாட்டில் 20 கோடி வசூலை டூரிஸ்ட் ஃபேமிலி படம் பெற்றிருக்கிறது.

மேலும் உலக அளவில் மொத்தமாக கிட்டத்தட்ட 27 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. இது போன்ற எதார்த்தமான குடும்ப படங்களை ரசிகர்கள் பெரிதும் ரசித்து வருகிறார்கள். சமீபகாலமாக வன்முறை நிறைந்த படங்கள் தான் அதிகம் வெளியாகிறது.

பெரிய பட்ஜெட்டில் போட்டு எடுக்கப்படும் அந்த படங்கள் லாபத்தையும் கொடுப்பதில்லை. ஆகையால் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற மனம் நிறைவான படங்கள் நிறைய வந்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.