Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினிடம் உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறான் என்ற விஷயத்தை குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லு என ரோகிணி அம்மா சொல்கிறார். அதே மாதிரி வித்தியாவும் நீ குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்வதற்கு முன் முத்து மற்றும் மீனாவிடம் சொல்லிவிடு.
அவர்கள் ரொம்ப நல்லவங்க, உன் வாழ்க்கையில் பிரச்சனை வராதபடி அவங்க பார்த்துக் கொள்வார்கள் என்று அட்வைஸ் பண்ணுகிறார். ஆனால் இவர்கள் 2 பேரும் சொல்வதை கேட்காமல் ரோகிணி இதற்கெல்லாம் காரணம் முத்து மீனா தான் என்று சொல்லி அவங்க மீது கோபத்துடன் இருக்கிறார். அந்த நேரத்தில் லோக்கல் ரவுடி சிட்டி, ரோகினிக்கு கால் பண்ணுகிறார்.
அதாவது நான் ஜெயிலில் இருந்து வந்துவிட்டேன், ஆனால் என்னை ஜெயிலுக்குள் அனுப்பிய முத்துவை நான் பழிவாங்காமல் விடமாட்டேன். அதற்கு உன்னுடைய உதவி எனக்கு தேவை என்று சொல்லி முத்துவின் கார் சாவியை எனக்கு யாருக்கும் தெரியாமல் ஒரு பத்து நிமிஷத்துக்கு எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். முதலில் யோசித்த ரோகிணி, நமக்கு இடைஞ்சலாக இருக்கும் முத்துவுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று எண்ணி சிட்டி இடம் நான் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.
அடுத்ததாக வித்தியா மற்றும் முருகன், பார்த்திருக்கும் வீட்டிற்கு பணத்தை கொடுப்பதற்கு வருகிறார்கள். அப்பொழுது முத்து மற்றும் மீனாவிற்கும் போன் பண்ணி கூப்பிடுகிறார்கள். உடனே எல்லோரும் ஒன்றாக கூடிய நிலையில் அங்கே பணத்தை வாங்கிட்டு போவதற்காக கதிர் மற்றும் அவருடைய மனைவியும் வந்துவிடுகிறார்கள். ஆனால் இவர்களை பார்த்ததும் முத்து மற்றும் மீனா கண்டுபிடித்து விட்டார்கள் இவர்கள்தான் ரோகிணி மற்றும் மனோஜின் பணத்தை ஏமாற்றியவர்கள் என்று.
உடனே முத்து கதிரின் சட்டையை பிடித்து போலீஸ் மற்றும் மனோஜ்க்கு போன் பண்ணி தகவலை சொல்லி விடுகிறார். அதன்படி மனோஜ் மற்றும் ரோகினி அந்த வீட்டிற்கு வந்து கதிர் மற்றும் அவருடைய மனைவியும் அடித்து விடுகிறார். உடனே போலீஸ் வந்து நிலையில் இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய்விடுகிறார்கள்.
இந்த அளவுக்கு உதவி செய்த முத்துவுக்கு ரோகிணி சொல்லும் பழி என்னவென்றால் உங்களை யாரு போலீஸ்க்கு போன் பண்ணி தகவலை சொல்ல சொன்னார். நீங்கள் போலீஸ்க்கு சொல்லப் போய் தான் பிரச்சனை பெருசா இருக்கிறது. இல்லையென்றால் நாமலே தனிப்பட்ட முறையில் விசாரித்து பணத்தை வாங்கி இருக்கலாம் என்று எல்லோரும் முன்னாடியும் முத்து மீது குற்றம் சாட்டி பேசுகிறார்.
இந்த ரோகினிக்கு என்னதான் முத்து மற்றும் மீனா நல்லது செய்தாலும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அவர்களுக்கு துரோகம் நினைக்கும் விதமாகத்தான் ரோகிணியின் வன்மம் இருக்கிறது. ரோகிணியின் கெட்ட புத்தியை தெரிந்து கொள்ளாமல் மீனாவும் விஷ பூச்சிக்கு அடைக்கலம் கொடுத்து வருவது போல் எல்லா பணிவிடையும் செய்து பாவம் பார்த்து வருகிறார். அதனால் தான் கடைசியில் அந்த விஷப்பூச்சி மீனா மற்றும் முத்துவை கொத்திக் கொண்டே வருகிறது.