Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனாவை பழிவாங்கி பாண்டியன் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்த சக்திவேல் மற்றும் குமரவேலு செய்த முதல் காரியம் மீனாவை அரசாங்க உத்தியோகத்திலிருந்து காலி பண்ண வேண்டும் என்று தான். அதற்காக மீனா மீது குற்றம் சாட்டி லஞ்சம் வாங்கி இருக்கிறார் என்று ஒரு கதை கட்டி விட்டார்.
அதன் படி மீனாவின் ஆபீஸ்க்கு, லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் வந்து மீனா லஞ்சம் வாங்கி இருக்கிறார் என்று நினைத்து மீனாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போக தயாராகி விட்டார்கள். இந்த விஷயம் பத்திரிகையாளர்கள் மூலம் எல்லோருக்கும் தெரிந்த நிலையில் பாண்டியன் மற்றும் செந்தில், மீனாவை காப்பாற்றுவதற்கு மீனாவின் ஆபீஸ்க்கு வந்து விட்டார்கள்.
அப்பொழுது செந்தில் மற்றும் பாண்டியன், அந்த ஆபிஸர்களிடம் மீனா அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது. நியாயமா வேலை பார்க்கக் கூடிய பொண்ணு என்று மீனாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார்கள். ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த சக்திவேல் மற்றும் குமரவேல் இருவரும் கூட்டிட்டு வந்த ஆட்களை வைத்து மீனா மீது தவறு இருப்பது போல் அந்த ஆபீஸரை நம்ப வைத்து விட்டார்கள்.
ஆனால் மீனா, பாண்டியன் மற்றும் செந்தில் இடம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்லி ஆபிஸரிடம் என் மீது தப்பு இல்லை என்று நிரூபிக்க எனக்கு ஒரு நிமிஷம் வேண்டும் என்று கேட்கிறார். உடனே அந்த ஆபிஸரும் சரி என்று சொல்லிய நிலையில் மீனா அதற்கு முன்னாடியே அங்கு மீனாவின் போனில் வீடியோவை ஆன் பண்ணி வைத்திருக்கிறார்.
உடனே மீனா அந்த போனை எடுத்துட்டு வந்து ஆபீஸில் நடந்த விஷயத்தை ஆபீஸரிடம் போட்டு காட்டுகிறார். அதன்படி அந்த வீடியோவில் மீனா மீது எந்த தவறும் இல்லை என்பது ஆபீசருக்கு புரிந்து விட்டது. உடனே மீனாவிடம் சாரி சொல்லி அங்கிருந்து அவர்கள் அனைவரும் கிளம்பி விடுகிறார்கள்.
பிறகு இதற்கெல்லாம் காரணம் சக்திவேல் மற்றும் குமரவேலு தான் என்று மீனாவுக்கு தெரிந்த நிலையில் என்னை அளிக்க வேண்டும் என்று நினைத்து உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று பதில் அளித்து விட்டார்.
பாண்டியன் முன்னாடி இவர்கள் அசிங்கப்பட்டு வெளியேறி போய்விட்டார்கள். அதன் பிறகு மீனா, பாண்டியன் மற்றும் செந்திலிடம் நடந்த விஷயத்தை சொல்கிறார். அதாவது நான் வழக்கம்போல் காலையில் ஆபீசுக்கு வரும் பொழுது குமரவேலு என்னை சந்தித்து இந்த வேலை இருக்கிறது என்று ஓவராக ஆட்டம் போடுகிறாய். இன்னையோட உன் வேலை அவ்வளவுதான் என்று சொல்லும் பொழுது எனக்கு ஏதோ தவறு நடக்கப்போவது போல் தெரிந்தது.
அதற்கு ஏற்ற மாதிரி ஆபீஸ் வாசலில் சக்திவேல் மற்றும் குமரவேலு இருவரும் இரண்டு மூன்று ஆட்களிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருப்பதையும் நான் பார்த்தேன். அதன் பிறகு தான் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று முடிவு பண்ணி போனை செட் பண்ணி வைத்தேன் என்று சொல்லுகிறார்.
உடனே பாண்டியன், மீனாவை பாராட்டி விட்டு செந்திலை கூட்டிட்டு போய் விடுகிறார். அந்த வகையில் புத்திசாலித்தனமாக இருக்கும் மீனா இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் வராது, பாண்டியன் குடும்பத்தையும் யாராலும் எதுவும் பண்ண முடியாது.
ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் அந்த குமரவேலுவை சும்மா விடக்கூடாது என்று கோபத்துடன் செந்தில், கதிரிடம் சொல்கிறார். அந்த வகையில் இவர்கள் இருவரும் குமரவேலுவை அடிப்பதற்கு கிளம்பி விட்டார்கள். இன்னும் இதனால் என்ன பிரச்சனை வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.