தப்பு கணக்கு போட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.. ஸ்ட்ராங்கான அக்ரிமெண்டால் அமேசான் அடித்த அந்தர் பல்டி

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பல படங்களில் கிராபிக் டிசைனராக வேலை செய்துள்ளார். இரண்டு படங்களை இயக்கியும் உள்ளார். கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் தான் வெளிவந்தது.

சௌந்தர்யா இப்பொழுது அமேசான் நிறுவனத்திற்காக ஒரு படத்தை டைரக்ட் ஓ டி டியில் ரிலீஸ் செய்வதற்காக இயக்கி வந்தார். குருதிப்புனல் என பெயரிடப்பட்ட அந்த படம் கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துவிட்டது. இதற்காக அமேசான் 35 கோடிகள் ஒதுக்கி உள்ளது.

ஆனால் 80% முடிவதற்குள் 35 கோடிகளும் செலவழிந்து விட்டது என அமேசான் நிறுவனத்திடம் மேற்கொண்டு பணம் கேட்டுள்ளார் சௌந்தர்யா. ஆனால் அமேசான் அதற்கு மறுப்பு தெரிவித்து பிரச்சனை செய்து வருகிறது. இதற்கு மேல் ஒரு பைசா கிடையாது படத்தை முடித்து தாருங்கள் என அக்ரிமெண்ட் படி பேசுகிறதாம்.

கார்ப்பரேட் நிறுவனமான அமேசான் ஆரம்பத்திலேயே எல்லாத்திற்கும் அக்ரிமெண்ட் போட்டு தான் இந்த வேலையில் இறங்கியுள்ளது. ஆனால் மேற்கொண்டு பணம் இருந்தால் மட்டுமே படத்தை முடிக்க முடியும் என சௌந்தர்யா தரப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது.

உங்களால் முடிக்க முடியாவிட்டால் நாங்கள் அதை அப்படியே ஸ்க்ராபில் போட்டு விடுவோம் என அமேசான் நிறுவனம் கூறிவிட்டதாம். 80சதவீதம் முடித்து விட்டால் மீதம் முடிப்பதற்கு எப்படியும் காசு வாங்கி விடலாம் என தப்பு கணக்கு போட்டு விட்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.