Suriya 45: சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ரெட்ரோ 100 கோடிகளை தாண்டி வசூலித்தது. ஆனாலும் விமர்சனங்களை பொருத்தவரையில் கொஞ்சம் பின்னடைவு தான்.
இருந்தாலும் பட குழுவினர் சக்சஸ் மீட் கொண்டாடி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதை அடுத்து சூர்யாவின் அடுத்த படம் பற்றிய பேச்சு தொடங்கிவிட்டது.
தற்போது அவர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இன்னும் சில மாதங்களில் ஷூட்டிங் முடிய இருக்கிறது. ஆனாலும் படத்தின் பெயர் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.
டைட்டிலை கேட்கும் போதே புல்லரிக்குதே
ஆளாளுக்கு ஒரு பெயர் யூகித்தாலும் ஆர் ஜே பாலாஜி என்ன வைத்திருக்கிறார் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அந்த கேள்விக்கு பதிலாக தற்போது படத்தின் டைட்டில் என்ன என்ற தகவல் கசிந்துள்ளது.
ஏற்கனவே அய்யனார், கருப்பு, மாசாணி அம்மன் போன்ற பெயர்கள் கூறப்பட்டது. ஆனால் கேட்டதுமே புல்லரிக்கும் வகையில் வேட்டை கருப்பு என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாம்.
கேட்கும் போதே கிராமிய மணம் வீசுகிறது. அப்படி என்றால் படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிடும். கடந்த சில படங்கள் சூர்யாவுக்கு பின்னடைவாக இருந்தது.
அதில் சில அரசியல் கூட இருந்தது. ஆனால் இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இருக்கும் என்கின்றனர். ஆக மொத்தம் ஆர்.ஜே பாலாஜி சூர்யாவுக்கு தரமான வெற்றியை கொடுப்பார் என தெரிகிறது.