ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் தக்லைஃப் படத்தை நெட்பிலிக்ஸ் ஓடிடி பிளாட்பார்ம் வாங்கியுள்ளது. சுமார் 125 கோடிகள் கொடுத்து வாங்கிய படத்திற்காக இப்பொழுது கமலையும், சிம்புவையும் விடாமல் துரத்தி வருகிறார்கள்.இந்த படத்திலிருந்து புது நடைமுறை ஒன்றை கமல் கொண்டு வந்துள்ளார்.
படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே படத்தைப் பற்றிய விமர்சனங்களை வெளியில் விடுகிறார்கள். இதனால் தியேட்டர்களில் அந்த படம் தொடர்ந்து ஓடுவதில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. விமர்சனங்கள் நன்றாக இல்லாவிட்டால் படத்தை ஓடிடி யில் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிடுகிறார்கள்.
பாலிவுட் படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆன பிறகு எட்டு வாரங்கள் கழித்து தான் ஓ டி டியில் வரும். ஆனால் இங்கே தமிழ் படங்கள் நான்கே வாரங்களில் வந்துவிடுகிறது. இதனால் தியேட்டர்கள் சரிவை சந்திக்கிறது. இப்பொழுது தக்லைஃப் படத்தை தயாரிக்கும் கமலஹாசன் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த படத்தை வாங்கியுள்ள நெட்பிலிக்ஸ் நிறுவனத்திடம் எட்டு வாரங்கள் கழித்து தான் இதை அவர்களது பிளாட்பார்மில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனால் பெருந்தொகை கொடுத்து வாங்கி விட்டோம் என அவர்களது சைடில் இருந்தும் பிரமோஷன் ஷூட்டிங் எடுத்து வருகிறார்கள்.
சிம்பு மற்றும் கமல் இருவரையும் வைத்து ஏவிஎம் ஸ்டுடியோவில் நெட்பிலிக்ஸ் தங்களது நிறுவனத்திற்காக தனி பிரமோஷன் ஷூட்டிங் ஒன்று எடுத்து வருகிறது. இப்பொழுது கமலும் சம்பவம் அதற்காகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.