வாழ்வோம் வாழ வைப்போம்.. ஒரு குடும்பத்தின் கண்ணீர் துடைத்த ராகவா லாரன்ஸ்

Raghava Lawrence: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தின் மீது பற்று, காதல் இருக்கும். அப்படித்தான் ராகவா மாஸ்டருக்கு டான்ஸ் என்றால் உயிர். ஆனால் அதையும் தாண்டி பிறருக்கு உதவி செய்வதென்றால் அவ்வளவு இஷ்டம்.

இப்படி எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்த பெருமை அவருக்கு உண்டு. விவசாயிகளுக்கு உதவி செய்வதில் தொடங்கி குழந்தைகளை அரவணைத்து பாதுகாப்பது வரை அவர் செய்யாத நல்ல விஷயங்கள் கிடையாது.

அதேபோல் உதவி என்று யார் தேடி வந்தாலும் உடனே செய்து கொடுத்து விடுவார். அப்படித்தான் நேற்றிலிருந்து ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.

அதாவது கூலி வேலை செய்யும் தம்பதியினர் தாங்கள் உழைத்து சேர்த்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை பாதுகாப்புக்காக ஒரு பெட்டியில் போட்டு மண்ணில் புதைத்து வைத்திருக்கின்றனர்.

ஒரு குடும்பத்தின் கண்ணீர் துடைத்த ராகவா லாரன்ஸ்

ஆனால் அவர்களின் கெட்ட நேரம், பணத்தை கரையான் அரித்து விட்டது. தன் மகளுக்கு காதுகுத்து செய்யலாம் என அந்த பணத்தை எடுத்த போது இதை பார்த்து அதிர்ந்து போய் இருக்கின்றனர்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஒருவர் ராகவா லாரன்ஸுக்கு இந்த மெசேஜை அனுப்பி இருக்கிறார். உடனே பதில் கொடுத்த மாஸ்டர் தற்போது அந்த ஒரு லட்ச ரூபாயை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்து சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

அவர்களை வரவழைத்து ராகவேந்திரா சாமியின் மடியில் அந்த பணத்தை ஒரு பெட்டியில் வைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதை எதிர்பார்க்காத அந்த தம்பதி கண்ணீர் மல்க அவருக்கு நன்றி கூறியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு ஒரு ராயல் சல்யூட் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

வாழ்வோம் வாழவைப்போம் என மாற்றம் மூலம் சேவை செய்து வரும் ராகவா மாஸ்டர் உண்மையிலேயே பெரிய மனுஷன் தான்.