Yogibabu: சமீப காலமாகவே யோகி பாபு பெயர் பல சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறது. ஷூட்டிங் சரியாக வருவதில்லை. ப்ரோமோஷனுக்கு வரமாட்டார் சம்பளம் அதிகமாக கேட்கிறார் என பல செய்திகள் வந்தது.
சில தினங்களுக்கு முன்பு கூட கஜானா பட தயாரிப்பாளர் மேடையிலேயே யோகி பாபுவை கண்டபடி விமர்சித்திருந்தார். 7 லட்சம் பணம் கொடுத்திருந்தால் அவர் வந்திருப்பார் என கடுமையாக பேசியிருந்தார்.
இது பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது யோகி பாபு ஜோரா கைய தட்டுங்க பட விழாவில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். சம்பளத்தை கேட்டா இங்க எதிரி ஆயிடுவோம்.
சர்ச்சைக்கு யோகி பாபுவின் பதிலடி
நான் அதிகமா பணம் கேட்டதா தப்பு தப்பா எழுதுறாங்க. ஆனா இந்த பட விழாவுக்கு நான் வந்திருக்கிறேன். ஏன்னா இது என்னோட படம்.
என்கிட்ட சொன்னாங்க அதனால வந்துருக்கேன் என ஆதங்கத்தோடு பேசியுள்ளார். அது மட்டும் இன்றி எனக்கு நிறைய பேர் பணம் கொடுக்கணும். அது உங்களுக்கு தெரியுமா என்று எமோஷனலாக பேசினார்.
அதேபோல் இந்த மாதிரி எதுவும் தெரியாம பேசாதீங்க. எல்லாருக்கும் சப்போர்ட் பண்ணி தான் நான் வந்துட்டு இருக்கேன்.
இன்னைக்கு 50 60 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் கூட எங்கிருந்து ஆரம்பிச்சு இருப்பாங்கன்னு யோசிங்க என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதற்கு கஜானா பட தயாரிப்பாளர் என்ன சொல்வார் என பார்ப்போம்.