கெட்ட புத்தி ரோகினியால் தெரியவரும் கல்யாணியின் ரகசியம்.. மீனா மூலம் எஸ்கேப் ஆகும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜிடம் இருந்து பணத்தை ஏமாற்றிய கதிரை முத்து மற்றும் மீனா இருவரும் சேர்ந்து போலீஸ் இடம் ஒப்படைத்து விட்டார்கள். ஆனாலும் கதிரை கண்டுபிடித்து விட்டாச்சு என்று மனோஜ் வீட்டில் வந்து விஜயாவிடம் சொல்கிறார். அப்பொழுது பணம் கிடைத்து விடுமா என்று விஜயா கேட்ட நிலையில் முத்து அவன் எல்லா பணத்தையும் செலவழித்து விட்டதாக சொல்கிறான் என கூறுகிறார்.

அதற்கு ரோகிணி அவ்வளவு ஈசியாக 30 லட்சம் பணத்தை செலவழித்து இருக்க முடியாது. போலீஸிடம் ஒப்படைக்காமல் நாம் விசாரித்து இருந்தால் அந்த பணத்தை வாங்கி இருக்கலாம். உங்களை யாரு போலீஸ் இடம் சொல்ல சொன்னா என்று முத்து மீனாவை குறை சொல்கிறார். இவர்கள் என்னதான் நல்லது செஞ்சாலும் ரோகிணி மற்றும் விஜயாவை பொறுத்தவரை அதை ஏற்றுக்கொள்ள மனசே வராது.

அடுத்ததாக வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ரோகிணிக்கு பிளாக்மெயில் பண்ணும் நபர் கால் பண்ணி பணம் கேட்டு பிரச்சினை பண்ணுகிறார். ஆனால் தற்போது ரோகினிடம் பணம் இல்லை என்பதால் சிட்டிக்கு போன் பண்ணி அந்த பிளாக் மெயில் நபர் கால் பண்ணி பணம் கேட்கிறார். என்னிடம் பணம் இல்லை நீ ஏதாவது பண்ணு என்று சொல்கிறார்.

உடனே சிட்டி, அப்படி என்றால் எனக்கு தேவையான முத்துவின் கார் சாவி எடுத்துக் கொடு. இன்னைக்கு இரவு நான் வருவேன் நீ மொட்டை மாடியில் இருந்து கார் சாவியை போட்டு விடு. பத்து நிமிஷத்தில் திருப்பி தந்து விடுகிறேன் என்று சொல்கிறார். உடனே ரோகினியும் இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக சரி என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு எல்லோரும் தூங்கிய நிலையில் ரோகிணிக்கு சிட்டி போன் பண்ணி சாவியை கேட்கிறார். ரோகினி யாருக்கும் தெரியாமல் முத்துவின் சாவியை எடுத்து மொட்டை மாடியில் இருந்து கீழே இருக்கும் சிட்டிக்கு தூக்கி எறிகிறார். உடனே சிட்டி, முத்துவுக்கு விபத்து ஏற்படும் விதமாக ஒயரை கட் பண்ணி விட்டு சாவியை ரோகினிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறார்.

ரோகிணியும் அந்த சாவியை யாருக்கும் தெரியாமல் திரும்ப வைத்துவிட்டு தூங்க போய் விடுகிறார். பிறகு வழக்கம் போல் முத்து சவாரிக்கு கிளம்பிய நிலையில் வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் துணிகளை மீனா எடுத்து ஆசிரமத்தில் கொடுப்பதற்கு தயாராகி விட்டார். அப்பொழுது ரவி சுருதி அண்ணாமலை அவர்களும் அவர்களுடைய தேவையில்லாத துணிகளை எடுத்து மீனாவிடம் கொடுக்கிறார்கள்.

அதை மீனா வாங்கிட்டு போகும்போது முத்து நானே உன்னை ஆசிரமத்தில் விட்டு விடுகிறேன் என்று சொல்லியதால் மீனா காரில் ஏற போகிறார். அப்பொழுது என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்பதற்காக ரோகினி மாடியில் இருந்து கீழே பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனா காருக்குள் ஏறும் பொழுது மீனாவின் பூக்கட்டும் தோழிகள் வந்து ஆட்டோவில் கூட்டிட்டு போவதற்கு வந்து விடுகிறார்கள்.

உடனே மீனா அந்த டிரஸ் எல்லாம் தோழிகளிடம் கொடுத்து கொண்டு போய் கொடுக்க சொல்கிறார். அப்பொழுது முட்டை வியாபாரி முத்துவின் கார் மீது முட்டையை கொட்டி விடுகிறார்கள். இதை கிளீன் பண்ணிவிட்டு போவதற்குள் மீனா முத்துவை வீட்டிற்குள் சாப்பிட கூட்டிப் போய் விடுகிறார். அதற்குள் ரவி அனைத்தையும் கிளீன் பண்ணியதால் மறுபடியும் முத்து காரில் ஏறி காரை ஸ்டார்ட் பண்ணுகிறார்.

என்ன ஆகப்போகுது என்று ரோகினி மேலே இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னதான் கெட்ட புத்தியில் ரோகினி சில விஷயங்களை செய்தாலும் நிச்சயம் மீனா செய்த நல்ல காரியத்தால் முத்து எஸ்கேப் ஆகிவிடுவார். ஏனென்றால் கோவிலில் ஒரு பாட்டி சொன்னது முத்துக்கு ஆபத்து இருக்கிறது, ஆனால் யாராவது உன்னை பார்த்து நல்லா இரு என்று சொன்னார்கள் என்றால் உன் புருஷனுக்கு வரும் ஆபத்து போய்விடும் என்று சொன்னார்.

அதன்படி மீனாவுக்கு ஆசிரமத்தில் இருந்து நல்வாழ்த்து கிடைத்துவிடும், அதனால் முத்துக்கு வர பிரச்சனையும் பெரிசாக இல்லாமல் போய்விடும். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கு ஏற்ப ரோகிணி விரித்த வலையில் கூடிய சீக்கிரத்தில் கல்யாணி பற்றிய ரகசியங்கள் வெளிவந்துவிடும். அதுவும் கிரிஷ் பற்றிய ரகசியம் ஒரு சில வாரங்களில் வரப்போகிறது.