இனியாவை வைத்து மீண்டும் பாக்யாவை பழிவாங்கும் சுதாகர்.. ஈஸ்வரி முகத்தில் கரியை பூசிய மருமகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஹனிமூன் போயிட்டு வீட்டுக்கு வந்த இனியாவை பார்ப்பதற்கு செழியன் ஜெனி மற்றும் பாக்கியம், சுதாகர் வீட்டிற்கு வந்து விட்டார்கள். அப்பொழுது பாக்யா, இன்னொரு ஹோட்டலில் பிசினஸ் பண்ண போவதாக அனைவரிடமும் சொல்கிறார். உடனே இதைக் கேட்டதும் இனியா சந்தோசத்தில் அப்படி என்றால் மூன்று ஹோட்டலுக்கு தொழிலதிபராகி விட்டாய் என்று பாக்யாவிடம் வாழ்த்து சொல்கிறார்.

அடுத்ததாக பாக்கியா, இனியாவை தனியாக பார்த்து பேச போய்விட்டார். அந்த நேரத்தில் சுதாகர், செழியன் இடம் உங்க அம்மா எந்த இடத்தில் ஹோட்டல் ஆரம்பித்திருக்கிறார் என்பதை விசாரிக்கிறார். செழியன் அந்த ஹோட்டலை போனில் வீடியோ எடுத்து வைத்திருப்பதை காட்டுகிறார். அதை பார்த்ததும் சுதாகர் சந்தோஷப்பட்டு உனக்கு தேவைதான் என்று மனசுக்குள்ளே சொல்லிக் கொள்கிறார்.

பிறகு பாக்கியா வந்ததும் இப்படி ஒரு கையேந்தி பவன் ஹோட்டல் வைத்திருப்பவரா எனக்கு சம்மந்தி என்று எல்லோரும் என்னிடம் கேள்வி கேட்பார்கள் நான் என்ன சொல்வது என கேட்கிறார். அதற்கு பாக்யா அப்படி யாராவது உங்களிடம் கேட்டால் என்னுடைய சம்மந்தி இரண்டு ஹோட்டலை வைத்து தொழிலதிபராக தான் இருந்தாங்க.

ஆனால் எனக்கு அந்த ஹோட்டல் மீது ஆசை இருந்ததால் அவங்களிடமிருந்து நான் அபகரித்து விட்டேன். அதனால் அவர்களுக்கு வேறு வழியில்லாமல் தற்போது சின்ன பிசினஸ் ஆரம்பித்திருக்கிறார் என்று சொல்லுங்க என சுதாகர் மூஞ்சியில் கரியை பூசும் விதமாக பதிலடி கொடுத்து விட்டார். அடுத்ததாக பாக்யவன் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு அனைவரும் கிளம்பி விட்டார்கள்.

ஆனால் இனியாவையும் மகனையும் போக விடாமல் தடுக்க வேண்டும் என்று சுதாகர் பிளான் பண்ணி நித்திஷிடம் ஆர்டர் போட்டுவிட்டார். நீயும் போகக்கூடாது உன் பொண்டாட்டியும் போகக்கூடாது என்று சொல்லிவிடுகிறார். அதன்படி நித்திஷ், இனியாவை வேறொரு இடத்திற்கு கூட்டிட்டு போகிறார். அடுத்ததாக ஹோட்டலுக்கு போன பாக்கியா ஹோட்டலின் பெயரை அறிமுகப்படுத்துகிறார்.

அதை பார்த்ததும் ஈஸ்வரி அதிர்ச்சியாக போகிறார். ஏனென்றால் எல்லா ஹோட்டலுக்கும் ஈஸ்வரி ரெஸ்டாரன்ட் என பாக்கியா பெயர் வைத்திருந்தார். அப்படிப்பட்ட பாக்கிய தற்போது முதல்முறையா பாக்கியா ரெஸ்டாரண்ட் என பெயர் வைத்ததால் இதை வைத்து ஈஸ்வரி பிரச்சனை பண்ண வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கோபி, நிச்சயம் பாக்யாவிற்கு சப்போர்ட்டாக ஈஸ்வரிடம் பேசி சமரசம் செய்து விடுவார்.