Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு எல்லோரையும் தொந்தரவு பண்ணுகிறார் என்ற கோபத்தில் கதிர் மற்றும் செந்தில் குமரவேலுவை தேடி அடிக்கப் போகிறார்கள். அப்படி போகும்பொழுது வழியிலேயே குமரவேலு, செந்தில் மற்றும் கதிர் கண்ணில் சிக்கி விடுகிறார். உடனே மொத்த கோப்பத்தையும் காட்டும் விதமாக செந்தில் குமரவேலுவை அடித்து விட்ட நிலையில் கதிரும் சேர்ந்து வெளுத்து விட்டார்.
பிறகு மீனா மீது எந்த தவறும் இல்லை என்று செய்தியில் சொல்வதை பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து பார்க்கிறார்கள். அத்துடன் மீனா புத்திசாலித்தனமாக செய்த விஷயத்தை எல்லோரும் பாராட்டி விடுகிறார்கள். உடனே பாண்டியனும், கடைக்கு வருபவர்களும் மீனாவை பற்றி தான் பெருமையாக பேசுகிறார்கள். நான் வழியில் வரும்பொழுது எல்லோரும் என்னிடம் உங்க மருமகள் கெட்டிக்காரி தான் என்று சொல்கிறார்கள்.
எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது என்று பாண்டியன் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்துவேல் மற்றும் சக்திவேல் வீட்டிற்குள் போவதே பார்த்த பாண்டியன் அவர்களை சும்மா விடக்கூடாது என்று வாசலில் நின்னு வாய்க்கு வந்தபடி திட்டி விட்டார். ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டும் விதமாக பாண்டியன், சக்திவேலை ரவுண்டு கட்டி விட்டார்.
இதையெல்லாம் பார்த்து முத்துவேல் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டுதான் இருந்தார். பிறகு வீட்டிற்குள் நுழைந்த குமரவேலுவிடம் மீனாவை மிரட்டினியா என்று முத்துவேல் கேட்கிறார். அதற்கு குமரவேலு ஆமாம் என்று சொல்லிய நிலையில் முத்துவேலும் அவருடைய பங்குக்கு கன்னத்தில் பலார் என்று அறைந்து விடுகிறார். உடனே சக்திவேல் நீங்கதான அந்த பெண்ணை வேலையை விட்டு தூக்க வேண்டும் என்று சொன்னீர்கள்.
அதுதானே நானும் என் பையனும் பண்ணனும், இப்பொழுது பிரச்சனை என்று தெரிந்ததும் அப்படியே ஒதுங்கி கொள்கிறீர்கள் என்று கேட்கிறார். முத்துவேல் நான் சொன்னன் தான், ஆனா அதற்காக குறுக்கு வழியை பயன்படுத்தி ஒரு பெண்ணை அவமானப்படுத்தும் அளவிற்கு செய்ய சொல்லலை. இனிமேல் நானே பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் எதையும் பண்ண வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.
பிறகு ஒருவேளை கூட உருப்படியா பண்ணவில்லை என்று குமரவேலுவை சக்திவேல் திட்டி அடிக்கிறார். கடைசியில் இந்த குமரவேலுவின் நிலைமை சோத்துலையும் அடி வாங்கியாச்சு, சேத்துலையும் அடி வாங்கியாச்சு என்பதற்கு ஏற்ப திரும்புகிற பக்கம் எல்லாம் எல்லோரிடமும் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார். அத்துடன் பாண்டியன், அரசி கல்யாணத்தை ஆடம்பரமாக பண்ண வேண்டும் என்று எல்லா ஏற்பாடுகளையும் பண்ணுகிறார் என்று குமரவேலு தெரிந்து கொண்டார்.
அந்த வகையில் எல்லாத்துக்கும் பழி தீர்க்கும் விதமாக வெறிகொண்டு இருக்கும் குமரவேலு அரசியை எப்படியாவது கல்யாணம் பண்ண வேண்டும் என்று குறுக்கு வழியில் சதி பண்ண போகிறார். இதிலிருந்து அரசி மற்றும் பாண்டியன் குடும்பம் எப்படி தப்பிக்க போகிறது என்பதுதான் விறுவிறுப்பாக இருக்கப் போகிறது.