ஜோடியாக வந்த ரவி மோகன்.. கோபத்தில் பொங்கிய ஆர்த்தி

Ravi Mohan : ஜெயம் ரவி சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். இந்த சூழலில் இன்று ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமண விழாவில் ரவி கலந்து கொண்டார். அதுவும் பட்டு வேட்டி சட்டையில் பாடகி கெனிஷா உடன் வந்திருந்தார்.

அதாவது கடந்த செப்டம்பர் மாதம் ஆர்த்தியை பிரிய போவதாக ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் ரவி கெனிஷா உடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது.

ஆனால் இதற்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்து விட்டார். ஆனால் இப்போது இவர்கள் ஜோடியாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து ஆர்த்தி ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதாவது தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை.

ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை

aarthi
aarthi
aarthi-ravi
aarthi-ravi

எனவே இப்போதும் நான் ஆர்த்தி ரவி தான். இவ்வளவு நாள் பொறுமையாக இருந்தேன், ஆனால் இப்போது உங்களது நடவடிக்கை தனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பெயரை மாற்றிக்கொண்டு, புதிய உடையில் வலம் வரலாம்.

ஆனால் எப்போதுமே எனது இரண்டு மகன்களுக்கும் நீங்கள் தான் அப்பா. விவாகரத்து என்றால் என்னவென்றே தெரியாத எனது இரண்டு மகன்களுக்கும் ஏதேதோ சொல்லி இதுவரை சமாளித்து வந்தேன். ஆனால் இன்று உலகமே உங்களது மோசமான நடவடிக்கையை பார்த்துள்ளது.

தந்தை என்ற கடமையில் இருந்து விலகிய உங்களை இந்த பிரபஞ்சம் சும்மா விடாது என்று ஆர்த்தி கோபத்தில் பொங்கி எழுந்துள்ளார். இப்போது பலரும் ஜெயம் ரவி மீது தான் தப்பு இருக்கிறது என்று ஆர்த்திக்கு ஆறுதல் அளிக்கும்படி கமெண்ட் செய்து வருகிறார்கள்.