Gossip: தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர்தான் அந்த நடிகர். ஆனால் கடந்த வருடம் அவர் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகு ஏகப்பட்ட சர்ச்சைகள் அவரை சுற்றியது.
அவர் மீது தான் எல்லோரும் குற்றம் சுமத்தினார்கள். ஆனால் நடிகர் தனிப்பட்ட முறையில் அனுபவித்த பிரச்சினைகளை ஓப்பனாக சொன்னார்.
அதன் பிறகு குற்றச்சாட்டு மனைவி மீது திரும்பியது. ஆனாலும் அந்த பாடகி விவகாரத்தில் நடிகர் உள்ளதை மறைத்து பேசினார்.
எல்லாத்துக்கும் துணிந்து இறங்கிய நடிகர்
ஆனால் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் இருவரும் ஜோடியாக வந்தது இப்போது புது பஞ்சாயத்தை கிளப்பி இருக்கிறது. இதெல்லாம் நடக்கும் என தெரிந்துதான் நடிகர் ஜோடியாக வந்திருக்கிறார்.
அதை பார்த்து தாங்க முடியாத மனைவி நீண்ட அறிக்கையை விட்டு புலம்பி தள்ளி விட்டார் அவருக்கு ஆதரவு இருந்தாலும் சிலர் எவ்வளவு டார்ச்சர் இருந்தா அவர் இந்த வாழ்க்கையை விட்டு போயிருப்பார்.
புது வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும் என நடிகருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் மாமியார் தான் முழு காரண கர்த்தாவாம்.
அவரால்தான் ஒரு குடும்பம் இன்று பிரிந்து போய் இருக்கிறது. உச்சகட்ட மன அழுத்தத்தில்தான் நடிகர் தனக்கான ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டார் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது.