Rajini: ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி, ஜெயிலர் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதில் கூலி சூட்டிங் முடிந்து விட்டது.
பிரமோஷன் பணிகள் சோசியல் மீடியாவில் தொடங்கப்பட்ட நிலையில் ஜெயிலர் 2 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் பாகத்தை விட பல சர்ப்ரைஸ் இருக்கிறது.
அதிலும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இணைந்து இருப்பது கூடுதல் பலமாக உள்ளது. 20 நாட்கள் நடிப்பதற்கே அவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளத்தை கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ்.
கூலிய விட அதிகமா இருக்கே.!
கேமியோ ரோலில் நடிப்பவருக்கே இவ்வளவு என்றால் ஹீரோவுக்கு எவ்வளவு இருக்கும் என்ற ஆச்சரியம் தோன்றாமல் இல்லை. அதன்படி சூப்பர் ஸ்டாருக்கு இப்படத்தில் 260 கோடி சம்பளம் என்ற தகவல்கள் கசிந்துள்ளது.
முன்னதாக கூலி படத்துக்காக 230 கோடி சம்பளம் என கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே 30 கோடி ரூபாய் சம்பளத்தை அதிகப்படுத்தி இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
இதில் படம் வெளியானால் நிச்சயம் ஒரு செக் கலாநிதி மாறனிடமிருந்து சென்றுவிடும். அது தவிர ஜெயிலர் படத்தில் கொடுத்தது போல் விலை உயர்ந்த கார் கூட பரிசாக வரும்.
இப்படியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட ப்ராஜக்ட்டுகளை கைவசம் வைத்துள்ளது. இதில் அல்லு அர்ஜுன் அட்லி இணைந்துள்ள படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.