தீபாவளி ரேஸில் குதித்த பிரதீப் ரங்கநாதன்.. அடுத்த பட டைட்டில் இதுவா.!

Diwali Release 2025: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிராகன் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்துடன் தனுஷ் இயக்கியிருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் வெளியானது.

ஆனால் டிராகன் அதை ஓரம் கட்டி வசூலில் மாஸ் காட்டியது. அதை அடுத்து பிரதீப் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள LIK படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படம் தீபாவளிக்கு வெளியாகும் என செய்திகள் வந்தது. ஆனால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் நடிக்கும் படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிப்பு வந்துள்ளது.

அடுத்த பட டைட்டில் இதுவா.!

அதன்படி பிரதீப் ஹீரோவாக நடிக்கும் 4வது படத்திற்கு டியூட் (Dude) என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே தீபாவளிக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. அதேபோல் சூர்யா 45 படமும் தீபாவளிக்கு வரும் என ஒரு செய்தி உள்ளது.

ஆனால் இது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. மேலும் சர்தார் 2 படமும் தீபாவளியை தான் குறி வைத்துள்ளது. ஆனால் சூர்யாவுக்காக கார்த்தி வழி விடுவார் என தெரிகிறது.

இந்த சூழலில் தீபாவளியை நோக்கி அடுத்தடுத்த அம்புகள் இறங்குகிறது. இதனால் சூர்யா 45 சோலோவாக களம் இறங்க வேறு தேதியை முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.