எழில் செய்த உருப்படியான விஷயம், வெறுத்துப் போன பாக்கியா.. இனியாவை ஆஃப் பண்ணிய சுதாகர்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், என்னை விட்டு என்னுடைய ஹோட்டல் தான் போயிருக்கிறது. ஆனால் என்னுடைய திறமை என்னிடம் தான் இருக்கிறது என்பதற்கு ஏற்ப சின்ன கடையை ஆரம்பித்து அதன் மூலம் வெற்றியை பார்ப்பதற்கு பாக்கியம் துணிந்து விட்டார்.

அந்த வகையில் சின்ன கடையை ஓபன் பண்ணி நினைச்ச மாதிரி ஒரு பிசினஸை ரன் பண்ண ஆரம்பித்து விட்டார். ஆனால் கடை பூஜைக்கு வந்த ஈஸ்வரிக்கு கடையும் பிடிக்கவில்லை, அங்கு நடந்த சில விஷயங்களும் கசப்பாகிவிட்டது. அதாவது விளக்கு ஏற்றுவதற்கு நம்மளை தான் கூப்பிடுவார் என்று ஈஸ்வரி எதிர்பார்த்து இருந்தார். ஆனால் பாக்கிய அது எதுவும் பண்ணவில்லை.

இதனை ஈஸ்வரி கண்டு கொள்ளாமல் இருந்தாலும் ஈஸ்வரி ரெஸ்டாரண்ட் என பெயர் வைத்திருப்பார் என எதிர்பார்த்தார். அதிலும் மண்ணு விழும் விதமாக பாக்கியம், நான் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதற்கு எதற்கு உங்க பெயரை வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணி பாக்கியலட்சுமி மெஸ் என்று வைத்து விட்டார்.

இதை எதிர்பார்க்காத ஈஸ்வரி முகத்தில் ஈ ஆடவில்லை. பாக்கியம் இப்படி எல்லாம் செய்ததற்கு காரணம் எல்லா விஷயத்திலும் துவண்டு வெறுத்துப் போய்விட்டார். அதனால் தான் இனி நமக்காக வாழலாம் என்று முடிவு பண்ணி விட்டார்.

உடனே ஈஸ்வரி இந்த கடையில் இருக்க முடியாது என்று கோபியை கூட்டிட்டு கிளம்பி விட்டார். போகும் வழியெல்லாம் பாக்கியவை குறை சொல்லும் விதமாக கோபி இடம் புலம்பிக்கொண்டே போனார். ஆனால் கோபி, பாக்யாவை நல்ல புரிந்து வைத்து அதற்கு ஏற்ற மாதிரி ஈஸ்வரியை சமாளித்துக் கொண்டார்.

அடுத்ததாக கடையில் பூஜை முடிந்தவுடன் எழில் செழியன் அமிர்தா ஜெனி அனைவரும் சாப்பிட்டு கிளம்பி விட்டார்கள். இதற்கு இடையில் இனியாவை அந்த பங்க்ஷனில் கலந்துக்க முடியாத அளவிற்கு நித்தீஷ் மற்றும் சுதாகர் பிளான் பண்ணி போக விடவில்லை.

ஆனாலும் எழில் மற்றும் இனியா சந்தித்து பேசிய பொழுது அம்மா எதற்காக சின்ன கடையை எடுத்து பிசினஸ் பண்ண வேண்டும், என்ன ஆச்சு என்று கேட்கிறார். உடனே எழில், உன்னுடைய கல்யாணத்துக்காக தான் அம்மா ஆசையாக வளர்த்து விட்ட ஹோட்டலை தார வாத்து கொடுத்து இருக்காங்க என்ற உண்மையை சொல்லிவிடுகிறார்.

இதனால் அதிர்ச்சியான இனியா நேரடியாக பாக்யாவை சந்தித்து எனக்காக எல்லாத்தையும் கொடுத்துட்டீங்களா என்று கேட்கிறார். இந்த ரெஸ்டாரண்ட் கொடுத்தால் தான் கல்யாணம் நடக்கும் என்று சொன்னாங்களா என கேள்வி கேட்கிறார். அதற்கு பாக்கியா அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று சொல்லிய நிலையில் இனியாவை சமாளித்து அனுப்பி விடுகிறார்.

அடுத்ததாக இனியா புகுந்து வீட்டில் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது சுதாகரிடம் எங்க அம்மாவிடம் இருந்து இரண்டு ஹோட்டலையும் கட்டாயப்படுத்தி வாங்கினீங்களா என்று கேட்கிறார்.

ஆனால் சுதாகர் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதற்கு ஏற்ப இனியாவின் வாயை அடைக்கும் விதமாக ஆமாம் என்று சொல்லிவிட்டு அதற்கான பணத்தையும் உங்க அம்மா என்னிடம் கேட்டு வாங்கி விட்டார்கள் என சொல்லி இனியவை ஆஃப் பண்ணி விடுவார்.