Pradeep Ranganathan : இயக்குனராக அறிமுகமான பிரதீப் இப்போது கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான லவ் டுடே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சமீபத்தில் டிராகன் படம் வெளியாகிறது.
அந்த படம் மிக குறுகிய காலத்திலேயே 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. இப்போது அடுத்தடுத்த படங்களில் பிரதீப் ரங்கநாதன் பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் lik படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ உடன் இணைந்து நயன்தாரா தயாரிக்கிறார். இந்நிலையில் lik படம் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
ரிலீசுக்கு காத்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் ரெண்டு படங்கள்
அடுத்ததாக அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது டியூட். இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் ஜோடி போடுகிறார் பிரேமலு நடிகை மமிதா பைஜூ.
மேலும் தற்போது பல படங்களில் பிசியாக இருக்கும் சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். டியூட் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்த படம் அக்டோபர் 16 அல்லது 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆகையால் அடுத்தடுத்து பிரதீப் ரங்கநாதன் சிக்ஸர் அடிக்க இருக்கிறார். இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்து வருகிறது.
ஆகையால் பெரிய நிறுவனங்களே இவரது கால்சூட்டுக்காக காத்திருக்கின்றனர். மேலும் பிரதீப்பும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். லைக் மற்றும் டியூட் ஆகிய படங்களில் பிரதீப் வெற்றி கொடுக்கிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.