Suriya: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரெட்ரோ கடந்த 1ம் தேதி வெளியானது. ஆனால் வழக்கம் போல படத்தை சிலர் சோசியல் மீடியாவில் நெகட்டிவ் விமர்சனம் செய்தனர்.
எப்போதுமே சூர்யா படம் ரிலீஸ் ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது படம் நன்றாக இருந்தாலும் கூட அதை குறை சொல்வதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது.
இது முன்னணி நடிகர்கள் பலருக்கும் நடக்கும் சம்பவம் தான் அது சூர்யாவுக்கு அதிகப்படியாக இருக்கிறது.
சூர்யா மேல ஏன் இவ்வளவு வன்மம்
இதையே ரசிகர் ஒருவர் கேள்வியாக கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டுள்ளார் ரெட்ரோ படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்களில் இவர் விசிட் செய்து வருகிறார்.
அப்போது ஆடியன்ஸிடம் கலந்துரையாடிய போது ரசிகர் ஒருவர் சூர்யா மேல் ஏன் இவ்வளவு வண்ணம் அவர் படம் ரிலீஸ் ஆனாலும் மட்டும் ஏன் இவ்வளவு நெகட்டிவிட்டி கிளம்புகிறது என கேள்வி கேட்டார்.
கார்த்திக் சுப்புராஜ் இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அதற்காக பதில் அளித்தார் அதாவது சூர்யா சார் பெயரை சொன்னாலே அரங்கமே அதிருது.
அவ்ளோ பவர் இருக்கு அப்படி இருக்கும்போது இதெல்லாம் தூசி மாதிரி கண்டுக்காதீங்க என கூறினார். இதைக் கேட்ட ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.