வீரா சீரியலில் மாறன் வீராவிடம் மாட்டிக் கொண்ட விஜி.. குற்ற உணர்ச்சியில் திருந்த போகும் கண்மணி

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், ராமச்சந்திரன் குடும்பத்தில் இருப்பவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் அவர்களை கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கண்மணி ராகவனை கட்டிட்டு வந்தார். கண்மணி நோக்கம் இதுதான் என புரிந்து கொண்ட வீரா. கண்மணியை மாத்தி ராமச்சந்திரன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று மாறனை கணவராக ஏற்றுக்கொண்டு ராமச்சந்திரன் குடும்பத்திற்குள் வந்தார்.

அப்படி வந்த பொழுது கண்மணி செய்த சூழ்ச்சியிலிருந்து ஒவ்வொரு முறையும் வீரா தான் காப்பாற்றிக் கொண்டு வந்தார். அதன் பிறகு கார்த்திக் மற்றும் பிருந்தாவின் காதல் வெளிவந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைப்பதற்கு முடிவு பண்ணினார்கள். ஆனால் புதுசாக வந்த விஜி எல்லாத்தையும் கெடுக்கும் விதமாக சதி செய்து கார்த்திகை கல்யாணம் பண்ணிக் கொண்டார்.

ஆனாலும் பிருந்தாவை மறக்க முடியாமல் தவித்த கார்த்திக், பிருந்தாக் கழுத்தில் தாலி கட்டி வீட்டிற்கு கூட்டிட்டு வந்தார். இதனால் கோபமான விஜி பிருந்தாவை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விட்டார். அப்பொழுதுதான் விஜி மீது வீராவுக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது. ஏற்கனவே மாறனுக்கு விஜி மீது சந்தேகம் வந்த நிலையில் தற்போது விஜியை ஃபாலோ பண்ண தயாராகி விட்டார்.

அப்படி விஜிக்கு தெரியாமல் மாறன் மற்றும் வீரா ஃபாலோ பண்ணும் பொழுது விஜி யாரையோ சந்தித்து பேசுவதை பார்க்கிறார்கள். பேசியது மட்டும் இல்லாமல் லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதையும் இருவரும் பார்த்து விடுகிறார்கள். அப்படி யாருக்கு விஜி இவ்ளோ பணத்தை கொடுக்கிறார் என்பதை பார்த்த வீரா மற்றும் மாறன் அந்த நபரை சந்தித்து விசாரிக்க போகிறார்கள்.

அப்பொழுது தான் தெரிய வரப் பொழுது வீரா மற்றும் கண்மணி அண்ணன் இறப்பிற்கு ராகவன் மாறன் காரணம் இல்லை. விஜிதான் காரணம், இவர்தான் பின்னணியில் இருந்து எல்லா சதியும் பண்ணி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வார்கள். நிச்சயம் கண்மணிக்கும் தெரியவரும் பொழுது தேவை இல்லாமல் ராமச்சந்திரன் குடும்பத்தை பழிவாங்குவதற்கு நாம் பல வழிகளில் முயற்சி எடுத்து இருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியில் பீல் பண்ணி திருந்த போகிறார்.

மேலும் கூடிய சீக்கிரத்தில் விஜி கையும் களவுமாக மாட்டிய நிலையில் மாறன் மற்றும் வீரா இருவரும் சேர்ந்து விஜியை வீட்டை விட்டு வெளியே அனுப்பப் போகிறார்கள்.