எதிர்நீச்சல் 2 சீரியலில் ரேணுகா நந்தினி வைத்து அடுத்த பிளான் போட்ட குணசேகரன்.. வரப்போகும் டுவிஸ்ட்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஒவ்வொன்றாக பிளான் பண்ணி காரியத்தை சாதித்து வந்த குணசேகரன் கடைசியில் தோற்றுப் போய்விட்டார். அதாவது விசாலாட்சி விஷம் குடிப்பது போல் குடிக்க வைத்து வெளியே போன மருமகளை உள்ளே வர வைத்தார். உள்ளே வந்த பிறகு ஈஸ்வரியை மறுபடியும் தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வர வேண்டும் என்று மணிவிழா ட்ராமாவை போட்டார்.

ஆனால் நேரம் பார்த்து கழுத்த அறுக்கணும் என்று சொல்வது போல் எல்லாத்துக்கும் சரி சரி என்று சொல்லி வந்த ஈஸ்வரி கடைசி நிமிஷத்தில் மாலையை தூக்கி எறிந்து குணசேகரன் ஆணவத்திற்கு பதிலடி கொடுத்து விட்டார். இதனால் அவமானப்பட்ட அண்ணன் குணசேகரனை நினைத்து தம்பிகள் ஒவ்வொருவரும் துக்கத்தில் இருக்கிறார்கள்.

இதை வைத்து குணசேகரன் அடுத்து ஒரு பிளான் போட்டுவிட்டார். அதாவது ஏற்கனவே குணசேகரன் அவமானப்பட்டு தோல்வி அடைந்த நிலையில் தம்பிகள் கோபமாக இருக்கிறார்கள். அதனால் இந்த கோபத்தை தூண்டிவிட்டு நம்மளுடைய ஜெயில் தண்டனையை நிரந்தரமாக ரத்து பண்ணலாம் என்று குணசேகரன் தெரிந்து கொண்டார்..

அந்த வகையில் வீட்டிற்கு லாயர் வரவைத்து குணசேகரனின் ஜெயில் தண்டனை ஒரேடியாக ரத்து பண்ண வேண்டும் என்றால் நந்தினி மற்றும் ரேணுகாவை ஜெயிலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டால் போதும் மத்ததெல்லாம் நான் பார்த்துக் கொள்வேன் என்று லாயர் சொல்கிறார்.

அந்த வகையில் ரேணுகா மற்றும் நந்தினியை போகவிடாமல் தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் கதிர் மற்றும் ஞானம், பொண்டாட்டிகளை டார்ச்சர் பண்ண போகிறார்கள். ஆனால் இவர்களும் புருஷன் சொல்வதை கேட்டு அமைதியாக இருக்கும் பட்சத்தில் கடைசி நிமிசத்தில் யாரும் எதிர்பார்க்காதபடி கோர்ட்டுக்கு சென்று குணசேகருக்கு எதிராக சாட்சி சொல்லி மறுபடியும் குணசேகரன் ஜெயிலுக்கு அனுப்பி விடுவார்கள்.