சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களான மதராசி, பராசக்தி படங்கள் முடியும் நிலையில் இருக்கிறது. இதற்கு அப்புறம் வெங்கட் பிரபுவுடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தார் ஆனால் அதற்கு இப்பொழுது நேரம் கைகூடி வரவில்லை. இந்த ப்ராஜெக்ட் இன்னும் ஒரு வருடம் கழித்து தான் ஆரம்பிக்கப் போகிறார்கள்.
தற்சமயம் சிவகார்த்திகேயன் பேஷன் ஸ்டுடியோஸ் சுதனுக்கு இரண்டு படங்கள் பண்ணுவதாக ஒப்பந்தமாகியுள்ளது. அதில் ஒரு படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி எடுப்பதாக இருந்தது, ஆனால் அவர் தெலுங்கில் நானி படம் இயக்குவதற்கு வந்த வாய்ப்பை நோக்கி பறந்து விட்டார்.
இப்பொழுது சிபி சக்கரவர்த்தி படத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த கால் சீட்டை அப்படியே குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் எடுத்துக் கொண்டார்.அவரும் எஸ் கேவிடம் கதை சொல்லி ஸ்கிரிப்ட் ஒர்க்கை முழுவதுமாக முடித்து விட்டார்.
விநாயக் இயக்கும் இந்த படம் அப்பா- பிள்ளை சென்டிமென்ட். அதனால் இதற்கு ஸ்ட்ராங்கான தகப்பன் கதாபாத்திரம் வேண்டுமாம். அதனால் இந்த கேரக்டர் பண்ணுவதற்கு மோகன்லாலை அணுகி உள்ளனர். அதுமட்டுமின்றி மோகன்லால் நடித்து விட்டால் கேரளாவிலும் கலெக்ஷனை அள்ளிவிடலாம் என்பதற்காக இந்த முன்னேற்பாடு.
சிவகார்த்திகேயனின் அடையாளமே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்கள்தான். இப்பொழுது அதையெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு அமரன், மதராசி, மாவீரன் போன்று கதைக்கு முக்கியத்துவம் கொண்டபடங்களாக. நடித்து வருகிறார். இப்பொழுது அதற்கெல்லாம் கொஞ்சம் பிரேக் கொடுத்துள்ளார்.