Memes: ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் இப்ப இப்படி ஆயிட்டாரே என்று அந்த இயக்குனரை பார்த்தால் நினைக்கத் தோன்றுகிறது. கோலிவுட்டின் கிங்காக வலம் வந்தவர் தான் அவர்.
ஆனால் இப்போது அவர் படங்கள் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. கொஞ்சம் கூட அப்டேட் ஆகல எங்களுக்கு ஏத்த மாதிரி படம் பண்ணுங்க என அந்த இயக்குனரை கிண்டல் அடித்து வருகின்றனர்.
கடைசியாக இயக்குனரின் படங்கள் வெளியாகி மொக்கை வாங்கியது. இதனால் அந்த வரலாற்று படத்தை எடுத்து தன்னை நிரூபிக்க போவதாக அவர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறாராம்.
அடம் பிடிக்கும் இயக்குனர்
ஆனால் இவரை நம்பி தலையை கொடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை. அதனால் என்ன செய்வது என்று இயக்குனர் பலமாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
நெருக்கமான நட்பு வட்டாரங்கள் கொஞ்ச நாளைக்கு இந்த ஆசையை தள்ளி போடுங்க என அட்வைஸ் கொடுத்து வருகிறார்களாம். ஆனாலும் இயக்குனர் கம்பேக் கொடுத்தே தீருவேன் என அடம்பிடிக்கிறாராம்.
அதேபோல் வெளிச்ச நடிகரை நடிக்க வைக்கவும் பிளான் போட்டு வருகிறார். ஆனால் பட்டதெல்லாம் போதும் என நடிகர் தயங்குவதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு பரபரப்பை கிளப்பி வருகிறது.