Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி தனியாக இருக்கும் பொழுது சுகன்யா அரசிடம் வீட்டில் தொந்தரவு பண்ணி உனக்கு சதீஷ் உடன் கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணுகிறார்கள். உனக்கு விருப்பமில்லை என்றால் என்னிடம் சொல்லிவிடு நான் எப்படியாவது இந்த கல்யாணத்தில் இருந்து உனக்கு விடுதலை வாங்கி குமரவேலுடன் சேர்த்து வைக்கிறேன் என்று அரசி மனதில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.
ஆனால் அரசி அதெல்லாம் ஒன்னும் இல்லை நீங்கள் தேவையில்லாமல் பேச வேண்டாம் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் சதீஷ் அரசிக்கு போன் பண்ணுகிறார். உடனே அரசி தனியாக போயி சதிஷ் உடன் பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த சுகன்யா, அரசிக்கு இந்த கல்யாணத்தில் சந்தோசம் போல குமரவேலுவே மறந்து விட்டால் என்று எண்ணி இந்த சந்தோஷத்தை கெடுப்பதற்கு சுகன்யா பிளான் பண்ண ஆரம்பித்து விட்டார்.
இதனால் குமரவேலுடன் கூட்டணி வைத்து சுகன்யா ஏதாவது பிரச்சனை பண்ண வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக சரவணன், தங்கமயிலை காலேஜுக்கு சர்டிபிகேட் வாங்குவதற்கு கூட்டிட்டு போய்விட்டார். போன இடத்தில் தங்கமயில் உண்மையை மறைக்க முடியாமல் எல்லாத்தையும் சொல்கிறார். அதாவது நான் காலேஜ் படிக்கவில்லை, இதனால் எனக்கு எந்த சம்பந்தமும் வராமல் தட்டி போய்க் கொண்டே இருந்தது.
அதனால் வேற வழி இல்லாமல் எங்க அம்மா பொய் சொல்லி என்னை கல்யாணம் பண்ணி வைத்து விட்டார் என்று உண்மையை சொல்லி விடுகிறார். இதைக் கேட்டதும் அதிர்ச்சியான சரவணன், என்னையும் என் குடும்பத்தையும் முட்டாளாக்கி ஏமாற்றி விட்டீங்க. இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தையும் உன்னையும் நான் எப்படி மனதார ஏற்றுக்கொள்ள முடியும் என்று கோபத்துடன் கிளம்பி விடுகிறார்.
போகும்போதெல்லாம் தங்கமயில் உடன் இருந்த விஷயத்தையும் தாலி கட்ட தருணத்தையும் எண்ணி சரவணன் ரொம்பவே பீல் பண்ணுகிறார். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் அல்லல்பட்டு கொண்டிருக்கிறார். இந்த விஷயத்துக்கு இப்படி என்றால் இன்னும் போலி நகை விஷயம் தெரிந்தால் என்ன நடக்கப் போகிறதோ, அதிலும் இந்த விஷயம் மீனா மற்றும் ராஜிக்கு ஏற்கனவே தெரியும் என்று தெரிந்தால் இதனால் மறுபடியும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் சரவணன், அரசி கல்யாணத்தை யோசித்து இப்போதைக்கு எந்த உண்மையும் சொல்ல மாட்டார். ஆனாலும் தங்கமயில் ஒவ்வொரு நாளும் ரண வேதனை தான் அனுபவிக்கப் போகிறார். இதிலிருந்து தங்கமயில் தப்பிக்க வேண்டும் என்றால் மீனா மற்றும் ராஜிடம் உண்மையை சொல்லிவிட்டால் அவர்கள் தங்கமயிலே காப்பாற்ற வாய்ப்பு இருக்கிறது.