நான் நடிக்க வேண்டிய கதைன்னு தங்கத்தை தூக்கிட்டு போன பாலையா.. கரெக்டான தூண்டில போட்டு விலாங்கு மீனை பிடித்த பிரபு

பாலையா தெலுங்கு சினிமா உலகின் சிங்கம். இவர் படம் ரிலீஸ் ஆகப் போகிறது என்றாலே ஆந்திராவே அல்லோலப்படும், அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கிறார் பாலகிருஷ்ணா. இவர் படங்களில் இவரே ரசிகர்கள், என்னிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பார்கள் என்று கூறி பல தடாலடி காட்சிகளை அரங்கேற்றுவார்.

ரீசன்டாக பாலையாவே ஒரு தமிழ் படத்தை பார்த்து மெய்சிலிர்த்து ஆர்ப்பரித்திருக்கிறார். இது நான் நடிக்க வேண்டிய படம், இது எனக்கு உண்டான கதை, அந்த டைரக்டர் தங்கத்தை தூக்கிட்டு வாருங்கள் என அழைப்பு விடுத்து கட்டளையும் போட்டுள்ளார். அந்த அளவிற்கு அந்த படம் அவரை கவர்ந்திழித்திருக்கிறது .

அஜித் நடிப்பில் கடைசியா வெளிவந்த படம் குட் பேட் அக்லீ . இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர்களுக்காக இயக்கியிருக்கிறார். அவரும் ஒரு அஜித் ரசிகர். அதனால் அஜித்தை எப்படியெல்லாம் இந்த படத்தில் காட்ட வேண்டும் என்ற அவருடைய ஆழ்மனது ஆசையை இதில் நிறைவேற்றி இருக்கிறார்.

படம் முழுக்க முழுக்க அஜித் புகழ் பாடி, அஜித்தை வேறு ஒரு லெவலுக்கு இந்த படம் கொண்டு செல்வதாக அமைந்திருந்தது. இது ஒரு பேன் பாய் படம். இந்த படத்தை பற்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவின் நண்பர்கள் அவரிடம் கூறவே படம் முழுவதையும் போட்டு பார்த்துள்ளார் பாலையா.

படத்தை பார்த்து புல்லரித்துப் போன பாலகிருஷ்ணா இப்பொழுது இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரனுக்கு வலை விரித்து அவரை தூக்கிட்டு போய் உள்ளார். கூடிய விரைவில் தெலுங்கில் ரெடியாகி போகிறது குட் பேட் அக்லீ படம். இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் பிரபு தயாரிக்கப் போகிறாராம். அதனால் ஆதித் மற்றும் பிரபு இருவரும் பாலையாவை பார்த்துள்ளனர். குட் பேட் அக்லீ பாலையா வெர்சன் ரெடியாக போகிறது.