டிடி நெஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்ற பாடல் பிரச்சனையோட கலந்து விளம்பரத்தையும் சந்தானத்திற்கு கொடுக்க போகிறது. வரும் 16ஆம் தேதி டிடி நெக்ஸ்ட் லெவல் படம் திரையில் வருகிறது. கூடவே சூரி, யோகி பாபு நடிக்கும் படங்களும் வெளிவருகிறது. சந்தானம் அவருடைய படத்தின் விளம்பர வேலையை தொடங்க ஆரம்பித்திருக்கிறார்.
சந்தானம் ஆரம்பிக்கிறாரோ இல்லையோ அந்த படத்தில் வரும் பாடல் தனது விளம்பரத்தை செய்யத் தொடங்கியுள்ளது. பெருமாளின் ஆஸ்தான பாடலான ‘கோவிந்தா ஹரி கோவிந்தா’ பாடலை பயன்படுத்தி ஒரு குத்துப்பாட்டை போட்டுள்ளார் சந்தானம். அங்கு தான் கிளம்பியது பிரச்சினை.
சந்தானத்திற்கு வந்த மிரட்டல்
நடிகர் பவன் கல்யாணின் ‘ஜனசேனா’ கட்சியின் உறுப்பினர்கள் பெருமாள் பாடலை அல்லது அந்த படத்தையே வெளியிட்ட தடைகோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சந்தானம் ஆளுங்கட்சிகளுடன் கொஞ்சம் நெருக்கமாக இருப்பதால் இவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதில் மேலும் சுவாரசியம் என்னவென்றால், பாடல் வெளிவந்த உடனேயே சந்தானத்திற்கு பல போன் கால்கள் அடிக்கடி வந்துள்ளது. அதுலயும் நடு ராத்திரியில் சந்தானத்தை போட்டு பொளந்து விட்டார்களாம்.
இதனை புரிந்து கொண்ட சந்தானம் விளம்பரம் தானாக வருகிறது என்று விட்டுவிட்டாராம். அதே நேரம் பயமும் வந்துள்ளது. அதனால் தான் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டால் தேர்தலில் பிரச்சாரம் செய்ய தயாராக தயாராக இருப்பதாக சந்தானம் கூறினார்.
எப்படி விளம்பரம் செய்தாலும் சரி, படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும் அல்லது தியேட்டரை விட்டு சீக்கிரம் ஓடும்.