மனோஜ் சொன்ன உண்மை, விஜயாவிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் ரோகினி.. முத்துவிற்காக போராடும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து குடித்துவிட்டு தான் கார் ஓட்டி பிரச்சினையாகி இருக்கிறது என்று எல்லோரும் முத்துவை தவறாக புரிந்து கொண்டார்கள். இதனால் ஸ்ருதி அம்மா வீட்டுக்கு வந்து முத்துவை மட்டம் தட்டி பேசி ரவி மற்றும் ஸ்ருதியை தனி குடித்தனம் போவதற்கு தூண்டி விடுகிறார்.

ஆனால் மீனா, உங்களுக்கு உங்க மகளை இங்கிருந்து பிரித்து கூட்டுப் போக வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு சின்ன காரணம் கிடைத்தாலும் அதை வைத்து வீட்டில் வந்து பெரிய பிரச்சினை பண்ணுவதை உங்களுக்கு வழக்கமாக போச்சு. என் புருஷன் குடித்துவிட்டு ஒன்னும் பிரச்சனை பண்ண வில்லை, அவருடைய வண்டியில் பிரேக் பிடிக்காமல் போய்விட்டது.

அதனால் எதிர்க்கே வந்த ஸ்கூல் ஆட்டோவில் மோதிரக்கூடாது என்பதற்காக அவருடைய உயிரை பணயம் வைத்து ஒரு பைக்கை தள்ளிவிட்டு இருக்கிறார். இதை யாரும் புரிந்து கொள்ளாமல் என் புருஷனை தவறாக பேசுவதை என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. யாராவது அவருக்கு என்ன ஆச்சு நல்லா இருக்கியா என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

அப்படின்னா என் வீட்டுக்காரர் வேண்டாமா போய்விட்டாரா என்ன என்று எல்லோரிடமும் கேள்வி கேட்கிறார். உடனே மனோஜ் நக்கல் அடித்து பேசும் பொழுது அண்ணாமலை கோபப்பட்டு மனோஜை அடிக்கப் போய் விடுகிறார். அப்பொழுது விஜயா வக்காலத்து வாங்கிய நிலையில் அண்ணாமலை மீனா சொல்லும் நியாயத்தை புரிந்து கொண்டு விஜயாவை திட்டி விடுகிறார்.

அடுத்ததாக மீனா நான் சொல்வதால் உண்மை நான் பொய் சொல்ல மாட்டேன் என்று விஜயாவிடம் சொல்கிறார். அதற்கு விஜயா ஆமாம் நீ பொய் சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும். ஏனென்றால் இந்த வீட்டில் தான் பொய்யே அடுக்கடுக்காக சொல்ல ஒருத்தி இருக்காலே என்று ரோகிணியை குத்தி காட்டி பேசுகிறார். ரோகிணியால் தான் இவ்வளவு பிரச்சனை வந்திருக்கிறது தற்போது முத்துவும் மாட்டிக்கொண்டான். ஆனாலும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்.

இதனைத் தொடர்ந்து முத்துவை இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மீனா அவருக்கு தெரிந்த ஒரு போலீசை சந்தித்து பேசுவதற்காக முத்துவை கூட்டிட்டு போகிறார். அங்கே போன இடத்தில் அந்த போலீஸ் சொன்னது என்னவென்றால் அருண் மீது இருந்த தீராத பகையால் அவரை கொலை செய்வதற்காக முத்து இந்த மாதிரி பண்ணுகிறார் என்று கேஸ் போட்டதாக சொல்கிறார்.

இதைக் கேட்டதும் முத்து மற்றும் மீனா அதிர்ச்சியாகிய நிலையில் எப்படியாவது இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று போராடுகிறார்கள். அந்த வகையில் மீனாவின் தங்கை சீதா வந்த பிறகுதான் அருணுக்கு எல்லா உண்மையும் தெரியவரும். அதன்பிறகு முத்துவுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் அருண் பார்த்துக் கொள்வார். அடுத்ததாக ஷோரூமுக்கு லேட் ஆயிட்டு என்று மனோஜ் அவசர அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

இதைப் பார்த்த விஜயா நீ லேட்டா போனாலும் லீவு போட்டாலும் யார் அந்த ஷோரூமை பார்த்துக் கொள்வார் என்று கேட்கிறார். உடனே மனோஜ் எனக்கு பதிலா ரோகிணி பார்த்துக் கொள்வார் என்று சொல்லிய நிலையில் விஜயா கோபப்பட்டு ரோகினிடம் சண்டை போடுகிறார். உன்னை தானே அந்த கடை பக்கமே போகக்கூடாது என்று சொன்னேன். எனக்கு தெரியாமல் என் பேச்சை மீறி இந்த மாதிரி வேலை எல்லாம் பார்க்கிறாயா என்று கோபப்பட்டு அடிக்க கை ஓங்குகிறார்.

நீ என்னிடம் என்னதான் மறைத்தாலும் என் பையன் எல்லா உண்மையும் சொல்லிவிடுவான் என்று விஜயா ரோகிணியை திட்டி விடுகிறார். நிச்சயம் இந்த ரோகினி லோக்கல் ரவுடி சிட்டி மூலம் எல்லோரிடமும் மாட்டிக் கொள்ளப் போகிறார்.