ஒரே பளாரில் சர்வமும் அடங்கிப்போன ஒட்டுஊதி ஜான்சி.. கொழுந்துவிட்டு எரியும் நக்கல் நந்தினி  

  எதிர்நீச்சல் 2 ஆரம்பத்தில் இருந்தே இந்த ஜான்சி ராணி  சம்பந்தமில்லாத பிரச்சனையில் தலையிட்டு வந்தார். ஈஸ்வரி, ரேணுகா ஓரளவு அடங்கிப் போனாலும் நந்தினி மட்டும் ஜான்சி மீது உச்சகட்ட வெறியில் இருந்தார். தேவையில்லாமல் மற்றவர்களை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கும் ஜான்சிக்கு நேற்று சரியான பாடம் புகட்டினார்.

 ஈஸ்வரி மீது கடும் கோபத்தில் இருக்கும் மாமியார் விசாலாட்சி நேற்று அவரை எடுத்தெறிந்து பேசி விட்டார். அவர் பேச்சுக்கு எசப்பாட்டு பாடிக்கொண்டு ஒட்டுஊதி வந்தார் ஜான்சிராணி. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடங்காமல் பளார் என ஒரு அறை கன்னத்தில் விட்டு விட்டார் நந்தினி.

 விழுந்த அடியை சற்றும் எதிர்பாராத ஜான்சி ராணி சர்வமும் அடங்கி போய் நின்றார். வீட்டை விட்டு வெளியே போ என துரத்தியும் கூட வெட்கமில்லாமல் மீண்டும் அதே வீட்டுக்குள் ஓடிவிட்டார். மறுபக்கம் விசாலாட்சி, நந்தினியை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். 

ஒரு பக்கம் எனக்கு ஜாமீன் வேண்டாம் என உச்சகட்ட நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் குணசேகரன். பெரிய தம்பி  ஞானம் அவர் காலில் விழுந்து கெஞ்சி கதறி ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து விட்டார். வக்கீலுடன் மூவரும் நீதிபதியை பார்க்க சென்றுள்ளனர்.

 ஞானம், கதிரையும் தாண்டி கடைசி தம்பியான சக்தி மட்டும் தேம்பித் தேம்பி அழுகிறார். குணசேகரன் செய்யும் நாடகத்தை அறியாத சக்தி,,உங்களுக்கெல்லாம் அவர் அண்ணன் எனக்கு அவர் அப்பா என குணசேகரன் மீது உள்ள உச்சகட்ட அன்பையும் பாசத்தையும்  வெளிப்படுத்தி வருகிறார்..