காதலால் கொண்டாடப்பட்டு அதே காதலால் கேலிக்குள்ளான 5 நட்சத்திரங்கள்.. கும்புடு போட்டு ஒதுங்கிய விக்கி!

Vignesh Shivan: அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். அப்படிதான் சில கதைகளை கேட்டு கேட்டு அலுத்துவிடும்.

இது தெரியாமல் சில நட்சத்திரங்கள் தொடர்ந்து தங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி வெளியில் அதிகம் பகிர்ந்து சலிப்படைய வைத்துவிடுவார்கள்.

அப்படி ஒரு காலத்தில் அட, தங்கள் துணையை இந்த அளவுக்கு காதலிக்கிறார்களே என வியப்படைய வைத்து, பின்னர் அட உங்களுக்கு வேற வேலையே இல்லையா என வெறுப்படைய வைத்த 5 நட்சத்திரங்களை பற்றி பார்க்கலாம்.

கேலிக்குள்ளான 5 நட்சத்திரங்கள்

விக்னேஷ் சிவன்: இந்த விஷயத்தில் அதிக அடி வாங்கியது விக்னேஷ் சிவன் தான். அதிலும் நயன்தாரா பியோன்ட் தி பாரிடேல் டாகுமெண்டரி வெளியான பிறகு அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் தன்னுடைய எக்ஸ் அக்கவுண்ட்டை தற்காலிகமாக டெலிட் செய்யும் அளவுக்கு ஆனது.

சூர்யா: சூர்யா-ஜோதிகா தம்பதி ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொடாடப்பட்டார்கள். சூர்யா எந்த மேடை ஏறினாலும் காதல் மனைவி ஜோதிகாவை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்.

சூர்யா குரலை மிமிக்ரி பண்ணுவார்கள் முதலில் இதை கிண்டல் செய்ய ஆரம்பித்து, பின்னர் நெட்டிசன்களும் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி அவருடைய காதல் மனைவி ஆர்த்தியை பற்றி பல பெட்டிகளில் பேசுவதை ரசிகர்கள் ரசித்து கொண்டாடினார்கள். இந்த மாதிரி ஒரு கணவர் தான் வேண்டும் என சிலாகித்த பெண்களும் உண்டு.

ஆனால் கெனிஷா உடனான காதல் சர்ச்சைக்கு பிறகு இதுக்கு தான் அவ்வளவு பேச்சா என சலித்து கொண்டிருக்கிறார்கள்.

ஜோதிகா: என் புருஷன் கொஞ்சம் ஹேப்பியா வச்சு இருக்காரு, பெரிய அளவில் வைரலான ஜோதிகாவின் பேச்சு.

சூர்யாவின் பக்கபலமாய் பார்க்கப்பட்ட ஜோதிகாவை தற்போது அவருடைய தோல்விக்கு காரணம் என சொல்லும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இந்து பிரேம்ஜி: வயது வித்தியாசம் கூட பார்க்காமல் உண்மையாக காதலித்து பிரேம்ஜியை திருமணம் செய்து கொண்டார் என இந்துவை பாராட்டாத ஆட்களே இல்லை.

திருமணத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் இன்பிளுயன்சாராக மாறி, பிரேம்ஜி மாமியார் மசாலாவை வியாபாரம் செய்ய ஆரம்பித்ததில் இந்துவின் பெயர் மொத்தமாய் டேமேஜ் ஆனது.