Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் படிக்கவில்லை பொய் சொல்லி ஏமாற்றி கல்யாணம் பண்ணி வைத்து விட்டதாக சரவணன் நொந்து போய்விட்டார். அதனால் தங்கமயிலே காலேஜிலேயே விட்டுட்டு சரவணன் வீட்டுக்கு கிளம்பி விட்டார். ஆனால் வீட்டுக்கு போனதும் உண்மையை சொல்ல முடியாது, ஏற்கனவே அரசி விஷயத்தில் குடும்பமே துவண்டு போய்விட்டது.
தற்போது தங்கமயில் பற்றி சொன்னால் அப்பாவுக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தில் சரவணன் உண்மையை சொல்லாமல் நேரடியாக காலேஜுக்கு போயி அழுது கொண்டிருக்கும் தங்கமயிலே கூட்டிட்டு வருகிறார். அப்படி கூட்டிட்டு வரும் பொழுது தங்கமயில் இடம் சரவணன் சொன்னது என்னவென்றால் இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எங்க வீட்டில் இப்பொழுது உன்னை பற்றி எந்த உண்மையையும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அரசி கல்யாணம் நல்லபடியாக முடிந்த பின்பு நிச்சயம் வீட்டில் இருப்பவர்களிடம் உன்னை பற்றி நான் சொல்வேன் என்று செக் வைத்து விட்டார். தங்கமயில் என்ன சொல்லி சமாளித்தாலும் அதை கேட்கும் மனநிலைமையில் சரவணன் இல்லாததால் வாயை மூடிக்கொண்டு தங்கமயில் வீட்டிற்கு போய் விடுகிறார்.
அடுத்ததாக பாண்டியன் வீட்டிற்கு வந்ததும் கல்யாணத்துக்கு தேவையான புடவைகள் எல்லாம் எடுக்க வேண்டும் என்று சொல்லி மருமகள்களையும் போக சொல்கிறார். அப்பொழுது சரவணன், தங்கமயில் போக வேண்டாம் வீட்டில் நிறைய வேலைகள் இருக்கும். சொந்தக்காரர்கள் வந்து கொண்டு போவார்கள். அவர்களுக்கு சமைத்து கொடுக்க வீட்டில் ஒரு ஆள் வேண்டும்.
அதனால் தங்கமயில் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சரவணன் சொல்கிறார். உடனே பாண்டியனும் கோமதி சரி என்று சொல்லிய நிலையில் மீனா மற்றும் ராஜிக்கு ஏதோ ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அந்த வகையில் தங்கமயிலை கூப்பிட்டு உங்களுக்கும் சரவணன் மாமாவுக்கும் ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார்கள். அதற்கு தங்கமயில் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லி போய் விடுகிறார்.
அடுத்ததாக ராஜி தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கதிர் வந்து ராஜியை எழுப்பி பைக்கில் வெளியே கூட்டிட்டு போகிறார். உன் கூட ரொம்ப தூரம் பேசிக்கிட்டே போகணும் என்பதற்காக தான் காலையில் கூட்டிட்டு போகலை என்று சொல்லி இருவரும் மனம் விட்டு பேசி பைக்கில் ரெய்டு போகிறார்கள். அப்படி போகும் பொழுது ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டு ரொமான்ஸ் பண்ணி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள்.