Sun Tv Serial: சீரியலுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப சின்னத்திரை தொலைக்காட்சிகள் மூலம் புதுப்புது சீரியல்கள் வந்து கொண்டே இருக்கிறது. மக்களும் ஒரு சீரியலையும் விடாமல் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சீரியலுக்கு ராஜாவாக சன் டிவி சேனல் தான் முதலிடத்தில் இருக்கிறது.
ஆனால் டாப் இடத்தில் இருந்த கயல் சீரியல் தொடர்ந்து பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் பின்னோக்கி சென்று மக்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அத்துடன் இந்த சீரியலை முடிக்க சொல்லி ஏகப்பட்ட கமெண்ட்ஸ்கள் வருவதால் இதற்கு சன் டிவி சேனல் தரப்பில் இருந்து ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள்.
அதாவது சன் டிவி சீரியல் பொருத்தவரை ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துவிடும். அதனால் தான் அந்த நேரத்தில் மக்கள் எதிர்பார்க்கக் கூடிய சீரியல்களை போட்டால் இன்னும் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெறலாம்.
அந்த வகையில் தினம் தோறும் 7.30மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக புதுசாக வந்த ஆடுகளம் சீரியலை ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள். தற்போது ஆடுகளம் சீரியல் 10 மணிக்கு ஒளிபரப்பு செய்வதால் அந்த நேரத்தில் எல்லோராலும் பார்க்க முடியவில்லை என்று மாற்ற சொல்லி மக்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
அந்த வேண்டுகோளுக்கு இணங்க சன் டிவி எடுத்த முடிவு 7.30 மணிக்கு ஆடுகளம் சீரியலையும், 10 மணிக்கு கயல் சீரியலையும் ஒளிபரப்பு செய்யலாம் என்று. அத்துடன் லட்சுமி மற்றும் புன்னகை பூவே சீரியலை முடித்துவிட்டு அதற்கு பதிலாக பராசக்தி மற்றும் தங்க மீன்கள் சீரியல் ஒளிபரப்பாக போகிறது.
மேலும் புதுசாக வரப்போகும் வினோதினி சீரியல் மாலை நேரத்தில் தான் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள். ஆனால் அதற்கான நேரம் மட்டும் இன்னும் முடிவு ஆகாததால் வினோதினி சீரியலை வெய்ட்டிங்கில் வைத்திருக்கிறார்கள்.