இனிமேல் இந்த ரெக்கார்டை முறியடிக்க ஆள் இல்லை என்பது போல் நாலு பேர் உலக சாதனை செய்துள்ளனர். கிரிக்கெட்டில் இத்தகைய நிகழ்வு நடப்பது எல்லாம் அரிதிலும் அரிது. அப்படி அரிதாய் நடந்த அந்த நான்கு ரெக்கார்டுகளின் விவரம் இதோ, இந்த ரெக்கார்டுகளை முறியடிக்க 99 சதவீதம் வாய்ப்பில்லை என்றை கூறலாம்.
மகேந்திர சிங் தோனி: மூன்று விதமான கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார் இதுவரை அப்படி யாரும் செய்ததில்லை.T20 உலககோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை வாங்கிய கேப்டன் என்ற பெருமையை வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஸ்டம்பிங் 0.08 செகண்ட்ஸில் யாரும் செய்யாததை செய்துள்ளார்.
சுனில் நரேன்: ஒருமுறை இவர் விளையாடிய 20 ஓவர் போட்டி டிரா ஆனது. உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ரெட் ஸ்டீல் மற்றும் கயானா வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சூப்பர் ஓவர் நரைன் வீசினார். ஒரு ரன் கூட கொடுக்காமல் அதை மெய்டன் ஓவராக வீசினார்.இந்த சாதனையை 99% நிகழ்த்த வாய்ப்பில்லை.
யுவராஜ் சிங்: வெறும் 12 பந்துகளில் அரை சதம் அடித்த ரெக்கார்ட்இன்று வரை இவர் கைவசம் தான் இருக்கிறது.. திபேந்திர சிங் என்னும் ஒருவர் 9 பந்துகளில் அடித்திருந்தாலும் அது இன்டர்நேஷனல் போட்டி கிடையாது. அதனால் இந்த ரெக்கார்ட் யுவராஜ் சிங் இடம் தான் இருக்கிறது.
டிராவிட்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் தொடர்ந்து 173 போட்டிகளில் டக் அவுட் ஆகாமல் இருந்துள்ளார். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை இனியும் இது நடக்குமா என்பது சந்தேகம்தான்..