Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், ஆரம்பத்தில் இருந்து விஜி மீது மாறனுக்கு சந்தேகம் இருந்தது. அதற்கு ஏற்ற மாதிரி விஜியின் வில்லத்தனம் நாளுக்கு நாள் கூடியதால் மொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அத்துடன் நல்லா இருந்த வள்ளி அத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருவதால் மாறன் இப்படியே விட்டால் குடும்பம் இரண்டாகி போய்விடும்.
அதனால் உடனே விஜி பற்றிய ரகசியத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று களத்தில் இறங்கி விட்டார். அந்த வகையில் விஜி வைத்திருக்கும் பொருளை செக் பண்ணி பார்க்கும் பொழுது அதில் போனை பார்த்து விடுகிறார். இந்த சம்பவத்தில் மாறனுடன் வீராவும் கைகோர்த்து விடுகிறார். அந்த வகையில் இவர்கள் இருவரும் சேர்ந்து விஜி போனில் இருந்து அம்மா என்ற நம்பருக்கு போன் பண்ணி பார்க்குக்கு வரவேற்கிறார்கள்.
அதன்படி புர்கா போட்டு விஜியின் அம்மா வந்து விடுகிறார். அங்கே மாறனும் வீராவும் சென்று விஜி அம்மா வைத்திருந்த போனை வாங்கி விஜிக்கு கால் பண்ணி உங்க அம்மா பார்க்கில் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க என்று தகவலை சொல்கிறார். உடனே விஜியும் பதறிப் போய் ஆட்டோவில் அந்த இடத்திற்கு போய்க் கொண்டிருக்கிறார்.
இதனால் நிச்சயம் மாறன் மற்றும் வீரா விரித்த வலையில் விஜி சிக்கிக் கொள்ளப் போகிறார். இதற்கிடையில் வள்ளியின் கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதால் மாறன் எப்படியாவது பேசி புரிய வைக்க வேண்டும் என்று வள்ளி அத்தையிடம் மாறன் பேசுகிறார். ஆனால் மாறன் என்ன சொல்ல வருகிறான் என்பதை காது கொடுத்து கூட கேட்காமல் மாறனை வள்ளியத்தை உதாசீனப்படுத்தி விட்டார்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு விஜி பற்றிய ரகசியங்கள் வெளிவரும் பொழுது அனைவருமே கார்த்திக் மற்றும் பிருந்தாவின் கல்யாணத்தை ஏற்றுக்கொண்டு மாறன் செய்தது சரி என சப்போர்ட் பண்ண போகிறார்கள்.