Serial: சீரியலின் ராஜாவாக இருக்கும் சன் டிவி சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக அடி வாங்கிக் கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில் விஜய் டிவி விறுவிறுப்பான கதைகளும் புத்தம் புது சீரியல்களையும் கொண்டு வந்து மக்களை திசை திருப்பி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவி சீரியலே மிஞ்சும் அளவிற்கு விஜய் டிவி சீரியல் டாப் இடத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டு மொத்த சீரியலையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இந்த மூன்று சீரியல்கள் தான் பட்டி தொட்டி எல்லாம் பறக்குது என்பதற்கு ஏற்ப மக்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டது. அந்த வகையில் சன் டிவியில் ஒத்த சீரியல் மட்டும் தான் பேராதரவு பெற்று வருகிறது.
சிங்க பெண்ணே சீரியலில் அன்புவின் நடிப்புக்கும் யதார்த்தமான கேரக்டருக்கும் மயங்கி சீரியலை மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது அன்பு மற்றும் ஆனந்தியின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இவர்களுடைய காதல் தெய்வீகமாகவும் உறுதியாகவும் இருப்பதால் இந்த ஜோடி ஜெயிக்க வேண்டும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் பல திருப்பங்களுக்கு இடையே தற்போது கதை நகர்ந்து வருகிறது. இருந்தாலும் அன்புவின் கேரக்டருக்காக தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக விஜய் டிவி தான் இரண்டு சீரியலையும் கைப்பற்றி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தொடங்கிய அய்யனார் சீரியலின் கதை அனைவரையும் கவர்ந்து விட்டது.
அண்ணன் தம்பிகளின் செண்டிமெண்ட்டையும் நடிப்பையும் பார்த்து மக்கள் பூரித்து போய்விட்டார்கள். முக்கியமாக இந்த வாரம் ஒளிபரப்பாகி வரும் காட்சிகள் அனைத்தும் பார்ப்பவர்களை இறுக வைத்து விட்டது. அந்த அளவிற்கு கதைகள் அனைத்தும் ரசித்து பார்க்கும் படியாக இருக்கிறது.
இதைத்தாண்டி இன்னொரு சீரியல் என்னவென்றால் மகாநதி. இதில் பெரிசாக கதை எதுவும் இல்லாவிட்டாலும் காவேரி மற்றும் விஜயின் கேரக்டர் மக்களை அதிக அளவில் கவர்ந்ததால் விகா என்ற முத்திரை ரசிகர்களால் பெற்று வருகிறார்கள்.
இதில் கடந்த வாரம் முழுவதும் விஜய் மற்றும் காவிரியின் காதல் மற்றும் ரொமாண்டிக் அனைத்தையும் வைத்து டிஆர்பி ரேட்டிங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த விட்டார்கள். அந்த வகையில் இந்த மூன்று சீரியல்கள்தான் இல்லத்தரசிகளின் ஹிட் சீரியல் ஆக பார்க்கப்பட்டு வருகிறார்கள்.