Ten hours: இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி தியேட்டரில் வெளியானது டென் ஹவர்ஸ். திரில்லரான இந்த படம் தியேட்டரில் பெரிய அளவில் கவனிக்கப்படாத நிலையில் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அமேசான் ஓடிடி தளத்தில் தற்போது ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு இருக்கிறது. ஒரே இரவு நடக்கும் சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் தொடக்க 10 நிமிடமே பரபரப்பான கதைகளத்துடன் நகருகிறது.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் நடித்துள்ளார். காணாமல் போன ஒரு பெண்ணை தேடும் சிவராஜ், அதற்கு இடையில் பஸ்ஸில் ஒரு பெண்ணுக்கு பிரச்சனை நடப்பதாக போன் வருகிறது. அங்கு சென்றால் ஒரு கொலை நடந்துள்ளது.
சிபிராஜின் டென் ஹவர்ஸ் பட விமர்சனம்
இந்த கொலையை செய்தது யார், காரணம் என்ன, அதை எப்படி சிபிராஜ் விசாரிக்கிறார் என்பதை திரில்லர் கலந்து பரபரப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர். எதிர்பார்த்த கிளைமாக்ஸ் தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
மேலும் படத்திற்கு பின்னணி இசை நன்றாக அமைந்திருக்கிறது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிபிராஜ் ஒரு நல்ல கதையை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போலீசாக நடித்திருக்கிறார்.
படத்தின் கதைக்கு அவர் மிக கனகச்சிதமாக பொருந்தி இருந்தார். மேலும் கைதி படத்தை போல் இந்த படத்திலும் கதாநாயகி மற்றும் பாடல்கள் இடம்பெறவில்லை. இரண்டு மணி நேரமும் ரசிகர்களை பதப்பதைக்க வைத்திருந்தார் இயக்குனர்.
சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5