Nayanthara: சுந்தர் சி இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2 உருவாகி வருகிறது. நயன்தாரா நடிக்கும் இப்படத்தின் பூஜையே பரபரப்பை கிளப்பியது.
கொள்கைகளை மறந்து நயன் பூஜைக்கு வந்ததில் தொடங்கி ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்த அட்ராசிட்டி கூட சர்ச்சையாக பார்க்கப்பட்டது. ஆனால் பட குழு தயாரிப்பில் அதெல்லாம் இல்லை என்று கூறினார்கள்.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. முந்தைய பாகம் போலவே இதிலும் அவர் அம்மன் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
மூக்குத்தி அம்மன் 2 ரகசியம்
ஆனால் இந்த முறை ஒன்று அல்ல இரட்டை கதாபாத்திரங்கள் என்பதுதான் ஆச்சரியம். அதன்படி அம்மனாக ஒரு கேரக்டரும் போலீஸ் ஆபீஸராக ஒரு கேரக்டரும் நயன் நடிக்கிறாராம்.
ஏற்கனவே அவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆனால் இந்த முறை இன்னும் மிடுக்காக காக்கி யூனிபார்மில் அவரை காணலாம் என்கிறது திரையுலக வட்டாராம்.
சுந்தர் சி ரகசியமாக வைத்திருந்த இந்த விஷயம் தற்போது கசிந்துள்ளது. இருந்தாலும் இது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பையும் ஒரு பிரமோஷனையும் கொடுத்துள்ளது.